தமிழ் திரையுலகில் நடிகர் விஜயகாந்துடன் இணைந்து தளபதி விஜய் நடித்த "செந்தூரப் பாண்டி" என்ற திரைப்படத்தை யாராலும் மறக்க முடியாது அப்படத்திற்கு பிறகு 'ரசிகன்' என்ற திரைப்படத்தில் நடித்து தனக்கென ரசிகர்களை உருவாக்கிய விஜய்க்கு 'இளைய தளபதி' என்ற பெயர் ரசிகர்களலால் வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து,1996-ல், இயக்குநர் விக்ரமன் இயக்கிய "பூவே உனக்காக" திரைப்படம் விஜய்க்கு மிகவும் திருப்புமுனையாக அமைந்தது.
அதன் பின், வரிசையாக லவ் டுடே, ஒன்ஸ்மோர், நேருக்கு நேர், காதலுக்கு மரியாதை, மின்சாரக் கண்ணா என 90காலங்களை தாண்டி 2000த்திலும் காலடி எடுத்து வைத்தார். அதில் கண்ணுக்குள் நிலவு, குஷி மற்றும் பிரியமானவளே, ப்ரண்ட்ஸ், பத்ரி, ஷாஜஹான், யூத் ,பகவதி, வசீகரா, சிவகாசி, போக்கிரி, குருவி, தெறி,பிகில்,வாரிசு, மெர்சல் என பல படங்களை நடித்து தனது கடின உழைப்பால் இன்று ஸ்டாராக வாழ்ந்து வருகிறார் நடிகர் விஜய்.

இப்படி பல ரசிகர்களை விஜய், கையில் வைத்திருந்தாலும் எண்ணற்ற படங்கள் நடித்து இருந்தாலும் விஜய் படம் வெளியாகும் நாள் மட்டும் சரியாக கூறவே முடியாது. ஏனெனில், அந்த அளவிற்கு பெரிய பிரச்சனைகளை சந்தித்த பின் தான் அவரது படங்கள் வெளிவரும். இப்படி அவரது படத்தின் படப்பிடிப்பு தளங்களில் ஆரம்பிக்கும் பிரச்சனை, பின்னர் படத்தின் தலைப்பிலும், பட வெளியீட்டிலும், ஆடியோ வெளியீட்டு விழாவிலும், வசனங்களிலும், அரசியல் ரீதியாகவும் என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிதான் வெளியே வரும்.
இதையும் படிங்க: தோல்வியே காணாத அட்லீயின் 'மெர்சல்' படம் நஷ்டமா...? தயாரிப்பாளர் ஓபன் டாக்...!

அந்த வரிசையில், கடந்த 2003-ம் ஆண்டு இயக்குநர் ஜெகன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான ‘புதிய கீதை’ என்ற திரைப்படம் வெளியாகும் சமயத்தில் இப்படத்திற்கு "கீதை" என பெயர் வைக்கப்பட்டது. ஆனால் அப்போது இருந்த சில இந்து அமைப்பினர் நடிகர் விஜய் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் என கூறி படத்தின் பெயர் ‘கீதை’ என வைக்கக் கூடாது என பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால்இப்படத்திற்கு ‘புதிய கீதை’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட பிறகே படம் வெளியானது.

இதே போல் அடுத்த படத்திற்கான பிரச்சனை வேறு ரூபத்தில் கிளம்பியது. 2011ம் ஆண்டு விஜய் மற்றும் அசின் நடிப்பில் வெளியான "காவலன்" திரைப்படத்தை வெளியிடுவதில் சிக்கல்களை ஏற்படுத்திய சினிமா திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் இப்படத்திற்கு முன்பாக வெளியான 'சுறா' படத்தின் தோல்வியால் நஷ்டம் அடைந்ததாகவும் அதற்கு நஷ்டஈடு கொடுத்த பின்தான் படத்தை வெளியிட அனுமதிப்போம் என கூறியதால் வேறு வழி இன்றி நடிகர் விஜய் நஷ்ட ஈடு கொடுத்து படத்தை வெளியிட வைத்தார்.

அதேபோல் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான துப்பாக்கி படத்திற்கு எதிராக 'கள்ளத்துப்பாக்கி' படக்குழுவினர் இப்படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் பிரச்சனையை முடித்த பின், இப்படத்தில் இஸ்லாமியர்கள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, பல இஸ்லாமிய அமைப்பினர் படத்திற்கு தடை விதிக்க கோரி நீதிமன்றத்தை நாடினர். பின், படத்தில் இருந்து சில காட்சிகள் நீக்கப்பட்ட பின்னர் படம் வெளியானது.

பின்பு எல்லோருக்கும் தெரிந்த "தலைவா" திரைப்படத்தில் நடந்த பிரச்சனையால் அதன் தயாரிப்பாளருக்கு நெஞ்சு வலி வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த அளவிற்கு இப்பட வெளியீட்டில் அவ்வளவு அரசியல் நடந்தது. தமிழகத்தில் வெளியிட முடியாத சூழலை உருவாக்கிய அப்பொழுது ஆட்சியில் இருந்த அதிமுகவினர், வெளிமாநிலங்களில் படம் வெளியாக வைத்து 11 நாட்கள் கழித்தே இப்படத்தை தமிழகத்தில் வெளியிட அனுமதி அளித்தனர்.

இதனை அடுத்து, கத்தி பட தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்திற்கும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கும் தொடர்பு இருப்பதாக கூறி படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. அடுத்து விஜயின் "புலி" திரைப்படம் வெளியாகும் அதிகாலை நேரத்தில் நடிகர் விஜய் மற்றும் இப்பட தயாரிப்பாளர் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை செய்ய வந்ததால் பகல் காட்சிகள் தள்ளிவைக்கப்பட்டது.
அடுத்து "தெறி" படத்திற்காக தியேட்டர் உரிமையாளர்களும், "மெர்சல்" திரைப்படத்தில் ஜி.எஸ்.டி, மற்றும் டிஜிட்டல் இந்தியா பற்றி பேசியதற்காக பாஜகவினரும் மருத்துவர்களை தவறாக சித்தரிப்பதாக மருத்துவ சங்கங்களும் சேர்ந்து போராட்டம் நடத்தி படத்திற்கு சிக்கலை உண்டாக்கினார்.

இப்படி வரிசையாக சர்க்கார், பிகில், மாஸ்டர், பீஸ்ட், வாரிசு வரை விஜய் நடித்த படங்கள் அனைத்தும் சிக்காத பிரச்சனைகளும் இல்லை காணாத போராட்டமும் இல்லை அந்த அளவிற்கு பல எதிர்ப்புகளை கடந்து வந்த நடிகர் விஜயை தற்பொழுது அரசியல் தலைவராக இருந்தாலும் அதிக அளவு தொண்டர்களை தன்வசம் வைத்து இருந்தாலும், அதற்காக எல்லாம் விஜயை அப்படியே விட்டு விட முடியாது என தற்பொழுது அவரது கடைசி படமான 'ஜனநாயகம்' படத்திற்கும் சிக்கல் வர வைத்து இருக்கின்றனர் அரசியல் கட்சியினர் என ரசிகர்கள் கொதிப்பில் உள்ளனர்.

அந்த வகையில், தற்பொழுது நடிகர் விஜய் நடித்து வந்த ஜனநாயகம் படத்தின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த படத்தை பெங்களூரை சேர்ந்த கேவிஎன் ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரித்து வரும் நிலையில், சமீபத்தில் இந்த நிறுவனத்தில் ஐடி ரெய்டு நடைபெற்று உள்ளது. மேலும் இதன் காரணமாக அந்த நிறுவனத்தின் கணக்குகள் முடக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் ஜனநாயகன் ஷூட்டிங்கில் பணியாற்றும் பணியாளர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக சரியான சம்பளம் மற்றும் பேட்டாக்கள் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டு தற்போது ஷூட்டிங் நிறுத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதையும் படிங்க: நடிகர் விஜயின் படத்தில் மூன்று இயக்குனர்கள்... அப்பட்டமாக வெளியே வந்த ரகசியம்..!