இயக்குனர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷரா விஜயன், சித்திக் ஆகியோருடன் கேங்ஸ்டர் தோற்றத்தில் 'காளி' என்ற பெயரில் விக்ரம் நடித்து இருக்கும் திரைப்படம் தான் "வீர தீர சூரன்". பல சட்ட சிக்கல்களுக்கு பின் மார்ச் 27ம் தேதி மாலை இயக்குனர் அருண்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அதன் பின் படத்தை வெளியிட்டார்.

இந்த அறிக்கையில், " வீர தீர சூரன் படம் இன்று(மார்ச் 27) மாலை முதல் தியேட்டர்களில் வெளியாகிறது என்றும் என் தந்தையே காலையில் முன்று முறை இந்த படத்திற்கு டிக்கெட் வாங்க சென்று படம் வெளியாகவில்லை என திரும்பி வந்துவிட்டார்.
அதேமாதிரி விக்ரம் ரசிகர்களும், பொது மக்களும் எவ்வளவு இன்னல்களை சந்தித்து இருப்பார்கள் என எனக்கு புரிகிறது. எல்லோரிடமும் படக்குழு சார்பாக மன்னிப்பு கேட்கிறேன். இந்த பிரச்னையில் எங்களுக்கு உறுதுணையாக இருந்த ரசிகர்கள், தியேட்டர் அதிபர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் எனது திரையுலக நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி " என தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: மக்களின் ஆதரவுக்கு கிடைத்த வெற்றி "வீர தீர சூரன்"...! வீடியோ வெளியிட்டு நன்றி சொன்ன விக்ரம்..!

இதனை தொடர்ந்து படத்தை பார்த்த மக்கள், படம் நன்றாக உள்ளது என்றும் இப்படத்தில் காவல் துறை அதிகாரியாக வரும் எஸ்.ஜே. சூர்யா தனது பழைய பகையை தீர்த்துக்கொள்ள வேண்டும் என "ரவி மற்றும் கண்ணன்" ஆகிய இருவரையும் என்கவுண்டர் செய்ய பிரமாதமாக திட்டமிடுவார் எனவும், பெரிய தாதாவாக இருக்கும் ரவி தனது மகன் கண்ணனை எஸ்.ஜே.சூர்யாவிடம் இருந்து காப்பாற்றுவதற்காக கதாநாயகன் விக்ரமின் உதவியை எப்படியாவது பெற்று விக்ரமை வைத்து எஸ்.ஜே. சூர்யாவை கொன்று தனது மகனை காப்பாற்ற எண்ணி விக்ரமிடம் உதவியை கேட்க, அவரும் ஒத்துக்கொண்டு காப்பாற்ற என்ன செய்கிறார் என்பதுதான் கதை" எனவும் விக்ரமை கட்டுப்படுத்தும் துஷார விஜயன், அவருக்கு வரும் ஆபத்தை எதிர்த்து போராடும் பெண்ணாகவும் அசத்தி இருக்கிறார் எனவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து மகிழ்ந்தனர்.

இப்படி படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து, சமீபத்தில் நடிகர் விக்ரம், தனது இன்ஸ்ட்டா பதிவில் ஒரு வீடியோவை மக்களுக்காக பதிவிட்டார் அதில், அதில் "ஒரே ஒரு வாழ்க்கை பிரச்சனையாக மாறுகிறது என ஈசியாக சொல்லலாம்.. ஆனால் அந்த பிரச்சனையை சந்திக்கும் பொழுது மனதிற்கு மிகவும் வேதனையாக இருக்கும். அதே போல் தான் இந்த "வீர தீர சூரன்" திரைபட பிரச்சனை. படம் பிரச்சனையில் உள்ளது என காதுகளில் கேட்கும் பொழுது மிகவும் வருத்தப்பட்டேன். அதை விட என்னுடைய ரசிகர்களுக்காக நான் உழைத்த உழைப்பு அனைத்தும் வீணாக போய்விட்டதே என நினைத்தேன்.

அதுமட்டுமல்லாமல், மக்கள் ட்ரெய்லரை பார்த்து படம் மாஸாக இருக்கும் கண்டிப்பாக வெற்றியடையும் என சொன்னதை கேட்டு மகிழ்ச்சியாக இருந்த எனக்கு பெரிய அடியாக இருந்தது இந்த பிரச்சனை. ஆனால் முதல் மற்றும் இரண்டாம் காட்சிகள் வெளியிடாமல் மாலை வெளியான படம் ஃபிளாப் ஆகிவிடும், நம் உழைப்பு எல்லாம் வீணானது என நினைத்தேன். ஆனால் அதைவிட மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்கு சென்று படத்தை பார்த்து ரசித்து வெற்றியடைய செய்து உள்ளீர்கள். உண்மையில் என்னை வீர தீர சூரனாக நடமாட வைத்து இருக்கிறீர்கள். உங்களுக்காக நான் கண்டிப்பாக பல படங்களில் நடிப்பேன். இப்படம் வெற்றியடைய செய்த உங்கள் அனைவருக்கும் நன்றி செலுத்துகிறேன்" என்றார்.

இதனை பார்த்த மக்கள், விக்ரமை புகழ்ந்து பேசிவரும் நிலையில், இப்படத்தின் இயக்குனர் அருண்குமார் தனது ஆதங்கத்தை வேதனையாக பகிர்ந்து உள்ளார். தனியார் சேனலுக்கு பேட்டியளித்த இயக்குனர் அருண்குமார் அதில், திரையரங்கில் படம் ஆரம்பித்த பிறகு படத்தின் காட்சிகளை செல்போனில் படம் பிடிப்பது, ஸ்டேடஸ் வைப்பது, இடையில் ஸ்நாக்ஸ் சாப்பிடுவது, படம் ஆரம்பித்த பிறகு டார்ச் அடித்துக் கொண்டு சீட்டை தேடுவது போன்ற செயல்கள் எனக்கு அதிருப்தி அளிக்கிறது.

நீங்கள் படத்தை செல்போனில் பிடித்து ஸ்டேட்டஸ் வைத்தால் படம் பார்க்காதவர்களுக்கு படத்தின் மீது உள்ள ஈர்ப்பு போய்விடும். அதுமட்டுமல்லாமல், படத்தின் இடைவெளியிலோ அல்லது ஆரம்பத்திலோ ஸ்நாக்ஸ் சாப்பிடுவது மற்றும் சீட்டை தேடுவது என இருந்தால் படத்தின் ரசனை குறைந்து விடும். ஏனெனில், படத்தை உன்னிப்பாக கவனித்தால் தான் கதையோட்டம் புரியும், இதுபோன்ற இடையூறுகள் காட்சிகளின் ரசனையை முற்றிலுமாக குறைக்கும் என வேதனையாக பேசியுள்ளார்.
இதையும் படிங்க: வெளியானது வீர தீர சூரன் பட மேக்கிங் வீடியோ..! விக்ரமின் நடிப்பை கண்டு மக்கள் மகிழ்ச்சி..!