ரஜினி நடித்த, இயக்குநர் ஷங்கரின் 'எந்திரன்' திரைப்படம் 'ஜிகுபா' என்ற மூலக்கதையின் தழுவல் என்று தொடரப்பட்ட வழக்கில் முதல்முறையாக காப்புரிமை சட்டத்தின் கீழ் PMLA-ன் கீழ் இயக்குனர் சங்கரின் ரூபாய் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை ED முடக்கி உள்ளது.
நக்கீரன் பத்திரிக்கையில் பணிபுரியும் ஆரூர் தமிழ்நாடன் என்பவர் எழுதிய ’ஜெகுபா’ என்கிற கதை 2007ஆம் ஆண்டு நாவலாக வெளியானது. இந்நிலையில் இயக்குனர் சங்கர் நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் முதலியோரை வைத்து ’எந்திரன்’ என்ற படத்தை 2010 ஆம் ஆண்டு இயக்கினார். சன் பிக்சர்ஸ் தயாரித்த இத்திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றிகரமான படமாக ஓடியது.

இந்த படம் உலகம் முழுவதும் 290 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஆனது. இந்த படத்தின் கதை தன்னுடைய ’ஜிகுபா’ கதையை தழுவி எடுக்கப்பட்டது என்று ஆரூர் தமிழ்நாடன் இயக்குனர் சங்கர், படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பினார். தனது கதையை திருடி எந்திரன் படத்தை எடுத்து கோடிக்கணக்கில் பணம் பார்த்ததாக கூறி, காப்புரிமைச் சட்டத்தின் படி கிரிமினல் குற்றம் என்று எழும்பூர் விசாரணை நீதிமன்றத்தில் ஆருர் தமிழ்நாடன் 2011 ஆம் ஆண்டு மே மாதம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு 13 ஆண்டுகளுக்கு மேலாக நடந்தது. இந்நிலையில் இயக்குநர் சங்கரின் ’எந்திரன்’ திரைப்படம் ஆரூர் தமிழ்நாடன் எழுதிய ஜுகுபா கதையின் தழுவல் என்பது உறுதியானதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இதை அடுத்து கதை திருட்டு சம்பந்தமாக காப்புரிமை சட்டம் 63 கீழ் சட்டவிரோத பண பரிமாற்ற தடைச்சட்டம் 2022 கீழ் திட்டமிட்ட குற்றமாக வகைப்படுத்தப்பட்டு சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் (PMLA Act) கீழ் இயக்குனர் சங்கரில் பெயரில் உள்ள சுமார் ரூ.10.11 மதிப்புள்ள மூன்று அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.
இதையும் படிங்க: ஜன்னல் வைத்த மாடர்ன் உடையில்... கிக் ஏற்றும் அதிதி ஷங்கர்!

இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இந்திய சினிமா வரலாற்றில் காப்புரிமைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் (PMLA Act) வழக்கு பதிவு செய்து சொத்துக்களை முடக்கியது இதுதான் முதல் முறை என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: என்ன "ஜெயிலர்" சவுண்ட் "ஜப்பான்" வரைக்கும் இருக்கு..! ஜப்பானில் தடம் பதித்த ஜெயிலர்.....ரிலீஸ் எப்போ..?