மெரினா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்த சிவகார்த்திகேயன் வருத்தப்படாத வாலிபர் சங்கம், காக்கி சட்டை, வேலைக்காரன், அமரன் என பல வெற்றி படங்களை கொடுத்து மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்டார்.

இன்று அவர் தனது 40வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், இன்று காலை 11 மணியளவில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படமான "மதராஸி" திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களை கொண்டாட்டத்தில் வைத்து உள்ளது.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயனின் புதிய அவதாரம்..! பிறந்த நாள் ட்ரீட்டாக வந்தது "மதராஸி"

அந்த கொண்டாட்டத்திற்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக இறுதிச் சுற்று, சூரரைப் போற்று' என மெகா ஹிட் கொடுத்த இயக்குநர் சுதா கொங்கரா நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து பராசக்தி படத்தை இயக்கி வருவது அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில் அவரும் தனது எக்ஸ் தளத்தில், சிவகார்த்திகேயனின் பிறந்த நாளையொட்டி 'பராசக்தி' படப்பிடிப்புத் தளம் மற்றும் படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டு, அதற்கு கீழ் "பிறந்தநாள் வாழ்த்துகள் ஹீரோ.
Twitter link: https://x.com/Sudha_Kongara/status/1891309363240800718?t=cGHFbRCVcFQY-4AhzwBtDA&s=08

சினிமாவைத் தொடர்ந்து இயக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுவது அதன் பயணம்தான். அந்த வகையில் உங்களோடு இணைந்து பயணித்து, பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சியிருக்கிறது." என்று நெகிழ்ச்சி போங்க பதிவிட்டு இருக்கிறார். இதனை பார்த்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இப்படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடிக்கின்றனர் என்றாலும், இப்படம் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் 100வது திரைப்படம் என்பது கூடுதல் ட்ரீட். அதனால் ரசிகர்கள், அப்ப பராசக்தி ஹீரோ யாருன்னு கேட்டா சிவாஜின்னு சொல்லுவாங்க....ஆனா இப்ப பராசக்தி ஹீரோ யாருன்னு கேட்டா சிவகார்த்திகேயன்னு சொல்லுவாங்க என்று கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: 100வது திருமண நாள் கொண்டாட்டம்... வீடியோவை பகிர்ந்து நெப்போலியன் மகிழ்ச்சி..! வசைப்பாடியவர்களையும் வியக்க வைத்த செயல்..!