துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் திரையுலகில் நடிக்கராக அறிமுகமானவர் தனுஷ். இந்த படத்திற்கு பிறகு அவர் நடித்த காதல் கொண்டேன் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை அடுத்து அவர் நடித்த படங்கள் ஹிட் அடித்தது. திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறிய தனுஷ், தமிழ் மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் படங்களில் அவர் நடிக்க தொடங்கினார். அவர் நடித்து வெளியான ஆடுகளம், அசுரன் ஆகிய படங்கள் அவருக்கு தேசிய விருதினை பெற்று தந்தது. அதுமட்டுமின்றி இந்திய அளவில் மிகச்சிறந்த நடிகர் என்ற பெயரையும் அவர் பெற்றிருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் ராயன் வெளியானது.
அடுத்ததாக குபேரா, இட்லி கடை ஆகிய படங்கள் வெளியாகவிருக்கின்றன. மேலும் அவர் பல படங்களை தனது கைகளில் வைத்திருக்கிறார். இதனிடயே ரஜினியின் மூத்த மகளுக்கும் தனுஷுக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்களும் இருக்கிறார்கள்.

தனுஷை வைத்து ஐஸ்வர்யா 3 என்ற படத்தை இயக்கி இயகுநராக அறிமுகமானார். அடுத்ததாக அவர் இயக்கிய வை ராஜா வை படத்திலும் தனுஷ் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். இந்த நிலையில் சில காரணங்களுக்காக தனுஷ் – ஐஸ்வர்யா கடந்த வருடம் நீதிமன்றத்தில் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றனர். இது ஒருபக்கம் இருக்க மறுபக்கம் தனுஷுக்கு பட தயாரிப்பு நிறுவனம் ஒன்று தலைவலி கொடுத்து வருகிறது. தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தனுஷை வைத்து ஒரு படம் தயாரிக்க சில ஆண்டுகளுக்கு முன்னதாக அட்வான்ஸ் தொகையாக 3 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறார்.
ஆனால் கதிரேசன் படத்தில் தனுஷ் நடிக்க முடியாது என தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தனுஷுக்கு ரெட் கார்டு போட வேண்டும் என்கிற அளவுக்கு கதிரேசன் சென்றார். இதுமட்டுமின்றி தற்போது இட்லி கடை படத்தின் தயாரிப்பு பணிகளுக்கும் இது தடையாக மாறியதாக சாமீபத்தில் பேட்டி ஒன்றில் இட்லி கடை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறியிருந்தார்.
இதையும் படிங்க: மீண்டும் இணைந்த தனுஷ் - அருண் விஜய் கூட்டணி!

இதனிடையே தான் வாங்கிய 3 கோடி ரூபாய் அட்வான்ஸை வட்டியுடன் சேர்த்து 6 கோடி வரை தந்துவிடுவதாக நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு கதிரேசன் சம்மதிக்காத நிலையில், நாசர் உள்ளிட்ட நடிகர் சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி 8 கோடி ரூபாய் வரை பெற்றுத் தர சம்மதித்துள்ளனர். ஆனால், தனக்கு 16 கோடி ரூபாய் பணம் கொடுத்தால் தான் இந்த பிரச்னையை தீர்க்க முடியும் என ஃபைவ் ஸ்டார் கதிரேசன் கூறியதாக தெரிகிறது.
இல்லையென்றால், தனக்கு பணமே வேண்டாம் கால்ஷீட் கொடுங்க தனுஷ் எனக் கேட்க, தனது தற்போதைய மார்க்கெட் அதிகரித்துவிட்டது என்றும் உங்கள் பேனரில் படம் பண்ண முடியாது என்றும் அப்படியே பண்ண வேண்டும் என்றால் இயக்குநர் வெற்றிமாறனை அழைத்து வாருங்கள் என தனுஷ் கூறிவிட்டார்.

இதனால், தான் இந்த பிரச்னை பூதாகரமானது. நயன்தாரா - தனுஷ் வழக்கு ஒரு பக்கம் சென்று கொண்டிருக்க கதிரேசன் - தனுஷ் வழக்கும் தற்போது பிரச்சனையாகியுள்ளது. ஒருபுறம் குடும்பத்தில் பிரச்சனை மறுபுறம் தொழிலில் பிரச்சனை இப்படியான சூழ்நிலையில், தனுஷ் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி தனுஷ் தன்னை வைத்து படம் இயக்கிய இயக்குநர் ஒருவருக்கு உடநிலை சரியில்லாமல் போனதை கேள்விப்பட்டதாக கூறப்படுகிறது. இதை அடுத்து தனுஷ் உடனடியாக அந்த இயக்குநருக்கு அனைத்து உதவிகளையும் செய்ததாக கூறப்படுகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் தனுஷை பாராட்டி வருகினறனர்.
இதையும் படிங்க: தனுஷுக்கு நான் கொடுக்க வேண்டிய சூழ்நிலை வந்தால்.. மௌனம் கலைத்த செல்வராகவன்!!