பிரபல இந்தி சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான கோவிந்தா தனது 37 வருட திருமண பந்தத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
80மற்றும் 90களில் பிரபல நடிகராக வலம் வந்தவர் கோவிந்தா. இவருக்கு சுனிதா என்பவருடன் 1987 ஆம் ஆண்டு திருமண நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு யாஷ் வர்தன், டீனா என்ற இரு பிள்ளைகள் உள்ளார்கள். கோவிந்தா மற்றும் சுனிதா ஆகிய இருவரும் கடந்த சில வருடங்களாகவே தனித்தனியாக வெவ்வேறு வீடுகளில் வசித்து வருகிறார்கள்.

நீண்ட நாட்களாகவே இவர்களுக்குள் தொடர்ந்து பிரச்சனை இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் தான் தற்போது விவாகரத்து பெற்று பிரிந்து இருப்பதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: நடிகை ஸ்வரா பாஸ்கர் X சமூக வலைத்தள பக்கம் முடக்கம்
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று சொல்லப்படுகிறது.
மும்பையில் தனது வீட்டு எதிரில் மற்றொரு வீட்டில் மனைவி சுனிதா வசித்து வருகிறார். 30 வயதான பிரபல மராத்தி நடிகை உடன் தொடர்பு காரணமாகத்தான் கோவிந்தாவை சுனிதா பிரிகிறார் என மகாராஷ்டிரா மாநிலத்தில் கிசுகிசு வேகமாக பரவி உள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு மும்பையில் கோவிந்தா துப்பாக்கி குண்டடிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது தான் வெளி உலகத்திற்கு கோவிந்தாவும் சுனிதாவும் ஒற்றுமையாக இல்லை பிரிந்து வாழ்கிறார்கள் என்ற செய்தியே வெளியே தெரிந்தது.

கோவிந்தா, சுனிதா திருமணமே ஒரு சுவாரஸ்யமான கதை தான் என்று சொல்லலாம். இவர்கள் திருமணம் மும்பையில் பாலிவுட் வட்டாரத்தில் யாருக்கும் தெரியாமல் நடைபெற்றது. அப்போது கோவிந்தா 24 வயதில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தார்.
திருமணத்தின் போது சுனிதாவுக்கு 18 வயதாகும் போதே திருமணம் நடைபெற்றது. சுனிதாவிற்கு வயது குறைவாக இருந்ததாலும் கோவிந்தா சினிமா துறையில் உச்சத்தில் இருந்ததால் பட வாய்ப்புகள் குறையும் என்பதாலும் திருமணம் ஆனதையே மறைத்து நீண்ட நாள் கழித்து தான் வெளியே சொல்லி இருக்கிறார்கள்.

சுமார் 37 வருட காதல் திருமணம் தற்போது முடிவுக்கு வந்துள்ள நிலையில் இதே போன்று பல பிரபலங்கள் தங்கள் வாழ்க்கை துணையை தற்போது பிரிந்து வருகிறார்கள் என்பது வேதனையான விஷயமாகும்.
தங்களது பாசத்திற்குரிய சூப்பர் ஸ்டார் கோவிந்தா ஜோடி பிரியும் செய்தி கேட்ட மும்பை மற்றும் இந்தியா முழுவதும் உள்ள கோவிந்தாவின் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்து போய் உள்ளனர்.
இதையும் படிங்க: பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் 3- வது திருமணம்: பாகிஸ்தான் நடிகரை கரம் பிடிக்கிறார்! சுவிட்சர்லாந்தில் தேன்நிலவு!