மரணத்திற்கு முன்னதாக கராத்தே மாஸ்டரும், நடிகருமான ஷிஹான் ஹுஸைனி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், எனது அன்பான துணை முதல்வரும், தமிழக விளையாட்டு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தமிழக அரசு சார்பில் எனது மருத்துவமனை செலவுக்காக 5 லட்சம் ரூபாய் நிதியுதவி செய்துள்ளார். அது எதிர்பாராதவிதமாக எனது உயிருக்கு ஆபத்தாக வந்துள்ள தீவிர நோய்க்கான மருத்தாக அமைந்துள்ளது. ஊடகங்களுக்கு கூட தெரியாமல், எந்தவித விளம்பரமும் இல்லாமல் இதை செய்திருக்கிறீர்கள். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நிதியிலிருந்து ரூ.5 லட்சத்திற்கான காசோலையை வழங்கியது. மரணிக்க உள்ள மனிதனின் தேவையை மதித்தீர்கள், குறிப்பாக இதை மலிவான அரசியல் விளம்பரத்திற்காக நீங்கள் செய்யவில்லை. இதற்காக நான் உங்களுக்கு தலைவணங்குகிறேன்.

அடுத்ததாக அரசியலைக் கடந்து, விளையாட்டு திறமைக்கு நீங்கள் அளித்துள்ள மரியாதைக்கு நன்றி. ஏனெனில் என்னை அனைவரும் அதிமுகவைச் சேர்ந்தவன் எனக்கூறுகிறார்கள். ஆனால் அது உண்மையில்லை. நான் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு நன்றியுள்ளவனாக இருந்தேன். ஒரு கராத்தே ஆசிரியராக நான் அவருடைய தைரியத்தை மதித்தேன். அது தவறாக புரிந்துகொள்ளப்பட்டு விட்டது எனக்கூறியுள்ளார்.

இதையும் படிங்க: பாலாவை பார்த்தா எல்லாரும் பயப்படுவாங்க... மனம் திறந்த ஸ்டண்ட் சில்வா!!
ஜெயலலிதாவுக்கு மிக தீவிர ஆதரவாளராக இருந்த ஹூசைனி, சாலையில் தன்னுடைய கையில் 101 கார்களை ஏற்றி, அந்த நசுங்கிய கையில் வடிந்த ரத்தத்தின் மூலம் ஜெயலலிதாவின் உருவப்படத்தை வரைந்தார். அதனை தொடர்ந்து ரத்தத்தால் ஜெயலலிதாவின் சிலையை அவர் செய்தது மேலும் சர்ச்சையையும் பரபரப்பையும் உருவாக்கியதை ஹூசைனி நினைவு கூர்ந்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “இச்சம்பவத்தைக் கேள்விப்பட்ட ஜெயலலிதா என்னை அழைத்து 8 கிரவுண்ட் நிலத்தையும், கட்டுமானத்தைத் தொடங்க மூன்று லட்ச ரூபாயையும் கொடுத்தார். ஆனால் அதன் பின்னர் வந்த ஆர்டரில் அப்படி எதுவும் இல்லை. அதிகாரிகள் கொடுத்த சிறிய இடத்தில் வில்வித்தை ரேஞ்ச் மற்றும் கராத்தே ஸ்கூல் கட்ட முடியாது என்பதை ஜெயலலிதாவிடம் சொல்ல முயன்றேன். 10 ஆண்டுகள் தொடர்ந்து முயன்றும் என்னால் அவரைச் சந்திக்க முடியவில்லை என அதிமுக அரசை விமர்சிக்கும் வகையிலும் பேசியுள்ளார்.
இதையும் படிங்க: ஒரே நேரத்தில் வெளியாக இருக்கும் மூன்று படங்கள்..! பராசக்தி, ஜனநாயகம் படத்திற்கு புதிய சிக்கல்..!