நேற்றைய எபிசோடில் மண்டபத்திற்கு என்ட்ரி கொடுத்த சிவனாண்டி சாமுண்டீஸ்வரியை கடத்த திட்டமிட்ட நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது சிவனாண்டி சந்திரகலாவை வைத்து சாமுண்டீஸ்வரி கவனத்தை திசை திருப்பி அவளை கடத்தி விடுகிறான்.
இதனையடுத்து இங்கே கல்யாணத்திற்கான ஏற்பாடுகள் நடக்க சாமுண்டீஸ்வரியை காணவில்லை என தெரிந்து எல்லாரும் குழப்பம் அடைகின்றனர். சந்திரகலா அக்கா வந்துடுவாங்க, இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்கணும் என்று எப்படியாவது கல்யாணத்தை நடத்தி விட வேண்டும் என முயற்சி செய்கிறாள்.

ராஜேஸ்வரிக்கும் கடைசி நிமிடத்துல சாமுண்டீஸ்வரி எங்கே போனா என்ற சந்தேகம் எழுகிறது. சந்திரகலாவிடம் விசாரிக்க அக்கா கோவிலுக்கு போய் இருப்பதாக சொல்லி சமாளிக்கிறாள். மறுபக்கம் சாமுண்டீஸ்வரியை கடத்தி கொண்டு செல்லும் வேன் எதிரே வந்த கார்த்தியின் கார் மீது மோத ரவுடிகளுக்கும் கார்த்திக்கும் இடையே வாக்குவாதம் உருவாகிறது.
இதையும் படிங்க: மாயா போட்ட புது நாடகம்.! ரேவதிக்கு காத்திருந்த அதிர்ச்சி - கார்த்திகை தீபம் அப்டேட் !
இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
இதையும் படிங்க: ரேவதிக்கு கார்த்திக் பார்த்த மாப்பிள்ளை யார் தெரியுமா? சிவனாண்டி போட்ட பிளான் - கார்த்திகை தீபம் அப்டேட்!