"வீ ஆர் தி பாய்ஸ்" இந்த பெயர் இன்றளவும் பேமஸாக இருக்க காரணம் ஒரு பெண் மற்றும் நான்கு ஆண்களின் கூட்டணி. பிக்பாஸ் வரலாற்றில் அனைவரும் குடும்பத்துடன் ஒரு நாள் கூட தவறாமல் பார்த்த நிகழ்ச்சி என்றால் அது "பிக்பாஸ் 3". ஏனெனில் வனிதா, சேரன் என பலர் பயங்கரமாக ஆட்டத்தை நகர்த்தவும், ஷாக்ஷி, அபிராமி போன்றவர்களின் காதல் வலிகளையும் காண வைத்தது இந்த நிகழ்ச்சி. ஆனால் ஆண்கள் பெண்கள் என்ற பாகுபாடு நிறைந்த அந்த வீட்டில் திடீரென புயலாய் கிளம்பியது ஒரு கூட்டம். அதிலும் ஒரு பெண்ணுடன் நான்கு ஆண்கள் நட்பு இருந்தால் அது இருவருக்குமே எப்படி பட்ட பலம் என்பதை காட்டி இருந்தனர், கவின், சாண்டி, முகின் ராவ், தர்ஷன் மற்றும் லாஸ்லியா.


எத்தனை சண்டை வந்தாலும் கூலாக கையாண்டுவிட்டு தனியாக சென்று ஒரே ஒரு பாடல் வரிகளை (நாங்க வீ ஆர் தி பாய்ஸ்) பாடி தங்களின் மனநிலையை மாற்றி கொண்டு இறுதிவரை சென்றனர். இதிலும் ஆரம்பத்தில் காதல் மன்னனாக தெரிந்த கவின், போக போக பல சிக்கலில் சிக்கினார். பின் நிலைமையை புரிந்து கொண்டு விளையாட ஆரம்பிக்கலாம் என நினைக்கும் போது "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" என்பது போல கவின் என்ன செய்தாலும் அது வீட்டில் பெரிய புயலையே ஏற்படுத்தும். இதனால் மனம் தளராத கவின், தனது நண்பர்களுக்காக ரூ.5 லட்சத்தை எடுத்து கொண்டு பிக்பாஸில் இருந்து வெளியேறி மக்கள் மனதில் நாயகனாக அமர்ந்தார். இப்படி இருக்க உள்ளே கவினுக்கு மிகவும் சப்போர்ட் என்றால் அது லாஸ்லியா தான், கவின் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே செல்லும் போது, லாஸ்லியா பட்ட வேதனை கொடுமையாக இருந்தது.
இதையும் படிங்க: தாவணியை சரிய விட்டு... கவர்ச்சியில் பிராக்கெட் போடும் லாஸ்லியா!

லாஸ்லியா என்பது நமக்கு தெரிந்த பெயர் ஆனால் இலங்கையில் அவரை 'லாஸ்லியா மரியனேசன்' என்றே அழைப்பார்கள். பிக்பாஸ் வர கூடிய அளவிற்கு லாஸ்லியா என்ன செய்தார் என பார்த்தால், இலங்கையில் உள்ள சக்தி தொலைக்காட்சியில் 2015 முதல் 2019 ஆம் ஆண்டு வரை தொகுப்பாளராகவும், செய்தி வாசிப்பாளராகவும் கடமையாற்றினார். பின்னர் 2019 ஆம் ஆண்டு தன் பணியில் இருந்து விலகி தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டார். இதுதான் அவரது அப்போதைய பையோ கிராபி. ஆனால் பிக்பாஸை விட்டு வெளியே வந்த லாஸ்லியா பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வந்தார். குறிப்பாக ஹர்பஜன் சிங் மற்றும் அர்ஜுன் நடித்த "பிரண்ட்ஷிப் [5]" என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, தற்போது "ஜென்டில்வுமன்" என்ற படத்தில் நடித்தும் இருக்கிறார்

இந்த நிலையில், தனியார் நிகழ்ச்சியில் "ஜென்டில்வுமன்" ப்ரோமோஷனுக்காக கொடுத்த பேட்டியில் கவினை பற்றி கேட்டதால் சற்று எமோஷ்னல் ஆன லாஸ்லியா "நான் ஆல்பம் பாடலில் நடித்தாலும், ஏதாவது புகைப்படங்கள் பதிவிட்டாலும், அதனை பற்றி பேசாமல் உடனே கவின் பற்றி கேட்பது எனக்கு சங்கடமாக இருக்கிறது. கவினுக்கு திருணம் ஆகிவிட்டது. அவரை பற்றி நான் பேசினால், அது அவரை திருமணம் செய்திருக்கும் பெண் முதல் அவர்கள் குடும்பத்தினர் வரை நம்மை பற்றி என்ன நினைப்பார்கள் என்ற எண்ணம் அதிகமாக இருக்கும். அதற்காகவே கவின் சம்மந்தமாக கேள்விகள் வரும்போது நான் முடிந்தவரை பதில் கூறினேன். ஆனால் அதை தாண்டி பலர் அதை பற்றியே கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்ததால் அது நன்றாக இருக்காது, அது பலரது வாழ்க்கையை அழித்து விடும். அதனால் 'வேண்டாம்.. இது போதும்' என கூறினேன். அதுமட்டுமல்லாமல், நான் பேசும் விஷயத்தால் அவரின் வாழ்க்கையில் எந்தவித பிரச்சனையும் வந்து விட கூடாது என்பது என் மனதில் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் என லாஸ்லியா கூறி இருக்கிறார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள், லாஸ்லியாவுக்கு ஆறுதல் கூறி வருவதுடன், அவர் மனதை மாற்ற திருமண அப்டேட்டை கேட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஜுன் 5-ல் Thug Life ரிலீஸ்... உறுதி செய்த கமல்ஹாசன்...