இளம் நடிகையான ரம்யா பாண்டியன் திருமணம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்தது.

இவருக்கு திருமணம் ஆகி மூன்று மாதங்களே ஆகும் நிலையில், தற்போது இவருடைய தம்பிக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.

இதையும் படிங்க: "என் இனிய பொன் நிலாவே" பாடலை பயன்படுத்த ரூ 30 லட்சம் கட்ட வேண்டும்..! ஐசரி கணேசுக்கு கோர்ட் உத்தரவு
இதுகுறித்த புகைப்படங்களை தற்போது ரம்யா பாண்டியன் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

ரம்யா பாண்டியன் பிஸ்னஸ் மேன் மற்றும், யோகா மாஸ்டரான லவ்வல் தவான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதால், அடுத்ததாக அவரின் அக்காவுக்கு திருமணம் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக ரம்யாவின் தம்பி, அவருடைய காதலியை கரம்பிடித்துள்ளார்.

ஐஸ்வர்யா என்பவரை தான் பரசு பல வருடங்களாக காதலித்து வந்தாக கூறப்படுகிறது.

தற்போது தன்னுடைய அக்கா ரம்யா திருமணத்திற்கு பின்னர் பரசுவின் திருமணம் சென்னையில் பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளது.

இதில் நெருங்கிய குடும்பத்தினர், மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.

ஆட்டம் - பாட்டம் என கொண்டாட்டம் கலை கட்டும் விதத்தில் நடந்துள்ள இந்த திருமணத்தின் புகைப்படம் வெளியிட்டு ரம்யா உருக்கமாக பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

அதில் என் சிறிய தம்பி பரசு பாண்டியன் திருமணம் செய்து கொண்டார், ஆனால் எனக்கு அவர் எப்போதும் 6 அடி உயரமுள்ள குழந்தையாகவே இருப்பார். ஒரு குழந்தை எப்படி இவ்வளவு முதிர்ச்சியடைந்து, ஒருபோதும் தொந்தரவு செய்யாமல் இருக்கும்?

மேலும் அவரது அழகான இதயத்திற்காக, கடவுள் அவருக்கு சிறந்த வாழ்க்கை துணையை பரிசளித்துள்ளார். எங்கள் இனிமையான ஐஸ்வர்யா. எங்கள் ரத்தினத்திற்கு ஒரு தேவதை கிடைத்ததில் எங்கள் குடும்பம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

ஐஷு, நாங்கள் உன்னை நேசிக்கிறோம், மேலும் உங்கள் குடும்பத்தை இன்னும் அதிகமாக நேசிக்கிறோம். ஒரு பெரிய குடும்பமாக முடிவில்லா மகிழ்ச்சியான நினைவுகளை உருவாக்க காத்திருக்க முடியாது.

இதயம் மிகவும் நிறைந்துள்ளது. என் அன்பான அன்பர்களுக்கு வாழ்நாள் முழுவதும் அன்புடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க வாழ்த்துகிறேன் என கூறி பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: 'பாலிவுட் சூப்பர் ஸ்டார்' 59 வயது அமீர்கானின் 3-வது காதல்: புதிய காதலி, தென் இந்திய பெண்!