மலையாள நடிகையான மாளவிகா மோகனன் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தின் மூலம் அறிமுகமானவர்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான 'பேட்ட' படத்தில் இவர் ஏற்று நடித்த கதாபாத்திரம் படத்திற்கே மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய கேரக்டர் என கூறலாம்.

இதையும் படிங்க: உங்க சிரிப்புக்கு நாங்க கேரண்டி...நான் செஞ்ச புன்னியம் தான் இந்த படத்தில் நடிப்பது..மாளவிகா மோகனன் நெகிழ்ச்சி..!
பலர் இதுபோன்ற குணசித்ர வேடங்களில் நடிக்க வேண்டாம் என கூறிய போதும் துணிந்து நடித்தார்.

இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார்.

மாஸ்டர் படத்தில் இவருக்கு முக்கியத்துவம் இல்லை என்றாலும், இந்த படத்தின் ஹிட் காரணமாக மாளவிகாவும் வெற்றிப்பட நாயகியாகவே பார்க்கப்பட்டார்.

இதை தொடர்ந்து, தனுஷுக்கு ஜோடியாக நடித்த மாறன் ஓடிடியில் நேரடியாக வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இதை தொடர்ந்து, கடந்த ஆண்டு விக்ரமுடன், 'தங்கலான்' படத்தில் நடித்திருந்தார். பாலிவுட் படங்களில் தற்போது கவனம் செலுத்தி வரும் மாளவிகா மோகனன் தெலுங்கில் பிரபாஸ் ஜோடியாகவும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தன்னுடைய கவர்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக மாளவிகா மோகனன் எடுத்து கொண்ட போட்டோ ஷூட் புகைப்படங்கள் இப்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. கொட்டும் அருவி முன் நின்று சிவப்பு நிற உடையில் டீப் நெக் ஜாக்கெட்டுடன் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: உங்க சிரிப்புக்கு நாங்க கேரண்டி...நான் செஞ்ச புன்னியம் தான் இந்த படத்தில் நடிப்பது..மாளவிகா மோகனன் நெகிழ்ச்சி..!