சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்குள் நுழைந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். தனுஷை வைத்து, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய 3 திரைப்படத்தில், தனுஷின் நண்பராக ஒரு காமெடி ரோலில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து தான், இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சிவகார்த்திகேயனை 3 படத்தில் முழுக்க முழுக்க காமெடி நடிகராக காட்டினால் அது 'மெரினா' படத்தை பாதிக்கும் என்பதால் தான் சிவகார்த்திகேயன் கதாபாத்திரம், தனுஷின் ஸ்கூல் ஸ்டூடெண்ட் ரோலுடன் மட்டுமே வந்தது. அதன் பின்னர் அந்த படத்தில் இருந்து சிவகார்த்திகேயன் விலகியதாக இயக்குனர் பாண்டிராஜே ஒரு பேட்டியில் கூறி இருந்தார்.
'மெரினா' திரைப்படத்திலும் கிட்ட தட்ட காமெடி கலந்த ஹீரோ கதாபாத்திரதத்தில் சிவகார்திகேயன் நடித்திருந்தால், அவரின் இமேஜ் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை. சின்னத்திரையில் இருந்து முழுமையாக விலகிய சிவகார்த்திகேயன், 'மெரினா' படத்திற்கு பின் நடித்த 'மனம்கொத்தி பறவை', 'கேடி பில்லா கில்லாடி ரங்கா', 'மான் கராத்தே', 'ரஜினி முருகன்' என அடுத்தடுத்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் மட்டும் அல்ல குழந்தைகள் மதிலும் சிவகார்த்திகேயனுக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

சிவகார்த்திகேயன் நடிப்பில், கடைசியாக வெளியான 'அமரன்' திரைப்படம், சிவகார்த்திகேயனை 300 கோடி வசூல் மன்னனாக மாற்றியது. மறைந்த இராணுவ அதிகாரி முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தை, உலக நாயகன் கமல்ஹாசன் தயாரித்திருந்தார். 90 முதல் 100 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்த படம், கடந்த ஆண்டில் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக இருந்தது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருந்தார்.
இதையும் படிங்க: 2024 ஸ்கோர் செய்தது யார்? விஜய்? ரஜினி? விஜய் சேதுபதி? சிவகார்த்திகேயன்?
அமரன் வெற்றிக்கு பின்னர் தன்னுடைய அடுத்த படத்தை, பெண் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவா நடித்து வருகிறார். இந்த படத்தில் ஜெயம் ரவி வில்லனாகவும், அதர்வா முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீ லீலா நடிக்கிறார்.

திரைப்பட பணிகளில் பிசியாக இருந்தாலும், குடும்பத்துடன் விசேஷ நாட்களை கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ள இவர்... தற்போது தன்னுடைய மூன்று குழந்தைகள் மற்றும் மனைவி ஆர்த்தியுடன் தை பொங்கலை வரவேற்றுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே சிவா தன்னுடைய இரண்டாவது மகன் குகன் மற்றும் மகள் ஆராத்யாவுடன் புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டிருந்தாலும், மூன்றாவது மகன் பவன் முகத்தை முதல் முறையாக ரசிகர்களுக்கு காட்டியுள்ளார். தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள குடும்ப புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: ஓவர் பந்தா உடம்புக்கு ஆகாது... விமர்சனத்தை சந்தித்த விழாவில் நயன்தாரா எடுத்த போட்டோஸ்!