தென்னிந்திய மாநிலங்களில் யுகாதி பண்டிகை பாரம்பரியமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாகும். கன்னடம், தெலுங்கு பேசும் மக்களால் இந்த பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான யுகாதி பண்டிகை என்று கொண்டாடப்படுவதை ஒட்டி அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் அனைத்து திராவிட சகோதர சகோதரிகளுக்கு தனது மகிழ்ச்சியான யுகாதி பண்டிகை வாழ்த்துக்கள் என்று முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்தி திணிப்பு மற்றும் தொகுதி மறுசீரமைப்பு போன்ற வளர்ந்து வரும் மொழியியல் மற்றும் அரசியல் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு, தெற்கு ஒற்றுமைக்கான தேவை இதற்கு முன்பு இருந்ததில்லை என கூறியுள்ளார். நாம் ஒன்றிணைந்து நமது உரிமைகள் மற்றும் அடையாளத்தை குறைத்து மதிப்பிடுவதற்கு உட்படுத்தும் ஒவ்வொரு முயற்சியையும் தோற்கடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: விஜய் ஒரு குழந்தை..! நாங்க பல ரேஸ்ல ஜெயிச்சவங்க.. அமைச்சர் சேகர்பாபு சரமாரி தாக்கு..!
மேலும், இந்த யுகாதி நம்மை ஒன்றிணைக்கும் எதிர்ப்பு மற்றும் ஒற்றுமையின் உணர்வைத் தூண்டட்டும் என்று தனது பதிவில் கூறியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கு யுகாதி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தெலுங்கு மற்றும் கன்னட சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் தனது மனமார்ந்த யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார். இந்தப் புத்தாண்டில் அனைவரின் வாழ்விலும் அன்பு, அமைதி, மகிழ்ச்சி, ஆரோக்கியம் நிலைத்து, சகோதரத்துவம் தழைத்தோங்க வாழ்த்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது யுகாதி வாழ்த்துகளை கூறியுள்ளார். பல நூற்றாண்டுகளாக தமிழ் மொழியுடனும், தமிழ் மக்களுடனும் இரண்டறக் கலந்து, நம் மண்ணுக்கும், கலாச்சாரத்துக்கும் பெருமை சேர்த்து, சகோதரத்துவம் பேணும் நம் தெலுங்கு, கன்னட சகோதர சகோதரிகளுக்கு, தமிழக பாஜக சார்பாக இனிய உகாதி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
இந்தப் புத்தாண்டு, அனைவரின் வாழ்விலும், மகிழ்ச்சியும், செல்வமும் பெருகுவதாகவும், அன்பும், அமைதியும் நிலவுவதாகவும், வசந்த காலத்தின் தொடக்க நாளான இந்த உகாதி நன்னாள் அமையட்டும் என்று வாழ்த்தியுள்ளார்.
இதையும் படிங்க: அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே இலக்கு..! சிஐஐ மாநாட்டில் முதல்வர் பெருமிதம்..!