ராகவா லாரன்ஸ் நடித்த இயக்கிய காஞ்சனா திரைப்படம் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதன் தொடர்ச்சியாக 2015 ஆம் ஆண்டில் காஞ்சனா 2 மற்றும் 2019 இல் காஞ்சனா 3 என அடுத்தடுத்த பாகங்களை இயக்கி ராகவா லாரன்ஸ் திரில்லார் படங்களை இயக்கி, தனக்கென்று கொண்ட ரசிகர் பட்டாளங்களை மகிழ்வித்து வந்தார்.
அதிக அளவில் ஆக்ஷன் மற்றும் திரில்லர் படங்களில் மட்டுமே நடிக்கும் ராகவா லாரன்ஸ், தற்போது தனது அடுத்த படத்திற்கான புதிய அறிவிப்பை வெளியிட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து ராகவேந்திரா ப்ரோடுக்ஷன் மற்றும் கோல்டன் மைன் நிறுவனம் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் காஞ்சனா படத்தின் அடுத்த பாகமானது உருவாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஹாரர்- ஆக்சன்-காமெடி ஜானரில் காஞ்சனா 4 உருவாக உள்ளதாக பட குழு தெரிவித்துள்ளது. மேலும் இப்படத்தில் பூஜா ஹேட்ட மற்றும் பாலிவுட் நடிகையான நோறா பதேகியும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து இப்படம் 90 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வலுக்கட்டாயமாக ரத்னாவை நெருங்கிய வெங்கடேஷ்! முத்துப்பாண்டியின் தரமான சம்பவம் - அண்ணா சீரியல் அப்டேட்!

தொடர்ந்து படத்தின் படப்பிடிப்புகள் கடந்த ஜனவரி 23ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது பொள்ளாச்சியில் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும் பான் இந்தியா படமாக உருவாகும் இப்படம் அடுத்த ஆண்டிற்குள் விரைவில் திரையிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உண்மை அறிந்து உடைந்து போகும் ராஜராஜன்; கார்த்திக் செய்ய போவது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்!