சூர்யாவின் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் கங்குவா. சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் பிரமாண்டமாக படமாக்கப்பட்டது. மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கிய இந்த படம் ரிலீஸானதும் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. படத்தில் சவுண்ட் எஃபெக்ட் அதிகமானதாக இருந்தததாகவும், கதைக்களம் சரியாக இல்லை என பல விமர்சனங்கள் எழுந்தன. இதனால் கங்குவா படம் மிகப்பெரிய அளவில் தோல்வியை சந்தித்தது.

கங்குவா படத்தின் மீதான விமர்சனத்துக்கு ஜோதிகா பதிலடி கொடுத்து வருகிறார். இந்த சூழலில் கங்குவாவை தொடர்ந்து சூர்யாவின் நடிப்பில் ‘ரெட்ரோ’ படம் உருவாகி வருகிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, நாசர், பிரகாஷ் ராஜ், ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ரெட்ரோ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோக்கள் வெளியாகி வரவேற்பை பெற்று வருகின்றன. ரெட்ரோ படம் மே மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: கூலி படத்தின் புதிய அப்டேட்… உற்சாகத்தில் ரசிகர்கள்!!
காதல் எமோஷ்னலில் எடுக்கப்பட்ட ரெட்ரோ வசூலை குவிக்குமா என்பதே கேள்வியாக உள்ளது. இதற்கிடையே வெற்றிமாறனின் இயக்கத்தில் உருவாக இருக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்க சூர்யா கமிட்டாகி இருந்தார். இப்படத்தின் அறிவிப்பு வந்ததில் இருந்தே மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வந்தது. எனினும் படப்பிடிப்பு தாமதாகி கொண்டே வருகிறது. வாடிவாசல் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி இருந்தது.
இந்த சூழலில் வாடிவாசல் படம் தள்ளிப்போவதற்கான காரணம் கூறப்படுகிறது.

அதாவது, வெற்றிமாறனின் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'வாடிவாசல்' படத்திற்கான 'பவுண்டட் ஸ்கிரிப்ட்' தயாராகவில்லை என்று என்று சொல்லப்படுகிறது. படத்துக்கான பவுண்டட் ஸ்கிரிப்டை வெற்றிமாறன் தயார் செய்து தரவில்லையாம். படத்தில் நடிக்க ரெடியான சூர்யா அதற்கான ஸ்கிரிப்டை கேட்டுள்ளார். அது இல்லாமல் இருக்கவே படடிப்பிடிப்பு வேலைகளில் தாமதம் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் உறுதியாகாத நிலையில் இதனால் தான் வாடிவாசல் படப்பிடிப்பு தொடங்கவில்லை என்று திரை வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பெண்களை கொண்டாடிய சினிமா... கிட்சன் முதல் அறம் வரை!!