தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் பொறிபறக்கும் வகையில் பேசிய நடிகர் விஜய் அதன்பிறகு ஆளே காணாமல் போயிருந்தார். ஆனால் ஒவ்வொரு அரசியல் நிகழ்வுகளிலும் தவெக சார்பில் அறிக்கைகள் தவறாது இடம்பிடித்து வந்தன. அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றையும் அளித்திருந்தார் விஜய். மற்றபடி அவரது கடைசி படமான விஜய் 69 படவேலைகளில் பிஸியாக இருந்து வந்தார்.

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் நடிகை கீர்த்தி சுரேஷ் அவரது நீண்டநாள் காதலரான ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கோவாவில் நடைபெற்ற அந்த மணவிழாவில் பங்கேற்க நடிகர் விஜய் சென்றிருந்தார். அதன்பிறகு பொதுவெளியில் அவரை பார்ப்பது அரிதாக இருந்தது.
இதையும் படிங்க: கீர்த்தி சுரேஷின் டேட்டிங்... விஜய் மறைத்த சீக்ரெட்... ஜோடியை பாங்காங் அழைத்துச்சென்ற மேனேஜர்..!

இந்தசூழ்நிலையில், நடிகர் விஜயின் அட்மினும் தயாரிப்பாளருமான ஜெகதீஷ் பழனிசாமியின் The Route நிறுவனம் சார்பில் பொங்கல் விழா சென்னை நீலாங்கரையில் உள்ள அவர்களது அலுவலகத்தில் நடைபெற்றது.. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகை கீர்த்தி சுரேஷ் - ஆன்டணி தட்டில் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது யாரும் எதிர்பாராத விதமாக சர்ப்ரைஸ் விசிட் அடித்தார் தளபதி விஜய். கருப்பு நிற பேண்ட், கருப்பு நிற பூப்போட்ட சட்டையில் கூலர்ஸ் பாணியில் கண்ணாடி அணிந்தபடி வந்த விஜயை பார்த்ததும் அந்த இடமே பொங்கல் பண்டிகையிலும் தீபாவளியாய் ஜொலித்தது. போதாக்குறைக்கு பொங்கல் பானையில் பச்சரிசி, வெல்லம் போன்றவற்றை தன் கைப்பட போட்டு பொங்கல் பண்டிகையை சிறப்புடன் கொண்டாடினார் விஜய்.

இதுமட்டுமல்லாது நமது பாரம்பரிய விழாக்களான உறியடி போன்ற விளையாட்டுக்களும் அரங்கேறின. கீர்த்தி சுரேஷ் லாவகமாக உறியடி பானையை விளாசிய காட்சி அடடா, அடடா.. கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷினி ஆகிய பெண்கள் ஒரு பிரிவாகவும், நடிகர் கதிர், ஜெகதீஷ் ஆகியோர் அடங்கிய ஆண்கள் மற்றொரு பிரிவாகவும் மாறி விளையாடிய காட்சி யூ டியூப்பை கலக்கி வருகிறது.
ஒருபுறம் துபாய் ரேஸ் மைதானத்தில் அஜித் பயர் விட்டுக் கொண்டிருக்க, இங்கு ரூட் க்ளியர் செய்து வருகிறார் விஜய். மொத்தத்தில் இந்த பொங்கல் பண்டிகை இரண்டு தரப்பு ரசிகர்களுக்குமே விருந்தாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: 2024 ஸ்கோர் செய்தது யார்? விஜய்? ரஜினி? விஜய் சேதுபதி? சிவகார்த்திகேயன்?