தமிழ் திரையுலகில், “பசங்க” என்னும் தமிழ் திரைப்படத்தில் ஜேம்ஸ் வசந்தன் இசையில் உருவான “அன்பாலே அழகாகும்” என்னும் பாடலை பாடி தமிழ் திரையிலகில் அறிமுகமானார் சிவாங்கி. அதன் பின், பிரபல தனியார் தொலைக்காட்சியின் "சூப்பர் சிங்கர் 7" மூலமாக பாடகியாக வந்தவர், அந்த நிகழ்ச்சியில் தனது குரலால் வாழ்க்கையில் பல அவமானங்களை சந்தித்து இருப்பதாகவும், இந்தக் குரலால் நான் நிறைய சந்தோஷங்களை இழந்துள்ளதாகவும் கூறி, பலரது அனுதாபங்களையும் பெற்று பின் தனக்கென ரசிகர்களை உருவாக்கினார். அதுமட்டுமல்லாமல் தனக்கான யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து, அவர் போகும் இடமெல்லாம் வீ-லாக் செய்து லட்சக்கணக்கான பாலோவர்ஸ்களைப் பெற்றவர்.

இதனை அடுத்து "குக்கு வித் கோமாளி" என்னும் நகைச்சுவை கலந்த சமையல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் தனது 'டான்' திரைப்படத்தில் கண்டிப்பாக நடிக்க வாய்ப்பு தருவதாக சிவாங்கியிடம் கூறியிருந்தார். அதே போல் அவரது படத்தில் நடிக்க வைத்தார்.
இதையும் படிங்க: சீராகும் கல்பனாவின் உடல்நிலை.. அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்...போலீஸ் தரப்பு..!

இந்த சூழலில், 2021ஆம் ஆண்டு "சிறந்த பெண் பொழுதுபோக்கு நட்சத்திரத்திற்கான விருதும், தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான பெண் நட்சத்திரத்திற்கான விருதும், பிரபல ஜோடிக்கான விருது ஆகிய மூன்று விருதுகளை இதுவரை பெற்றுள்ளார். இப்படி இருந்த சிவாங்கி, பல சினிமாவில் பல பாடல்களை பாடி வருவதோடு, தான் தனிமையில் இருக்கும் நேரத்தில் பொழுதை கழிப்பதற்காக பல இடங்களுக்கும் சென்று, அங்கு தான் எடுக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்து வருவார்.

இப்படி பாடல், நடிப்பு, வீ லாக் என்று பல பரிமாணங்களில் சுற்றித் கொண்டிருக்கும் சிவாங்கி, சமீபத்தில் வெளிநாட்டிற்கு தனது பொழுதை கழிக்க சென்று இருக்கிறார். தமிழ்நாட்டில் இருக்கும் பொழுது பாரம்பரிய உடை அணிந்த சிவாங்கி வெளிநாட்டில் அங்கு உள்ள பாரம்பரிய படி ஷார்ட் உடைகளை அணிந்து இருந்தார். தான் ஷார்ட் உடைகளோடு, அங்கு இருக்கும் அழகான இடங்களில் எல்லாம் போட்டோக்களை எடுத்து இணையத்தில் பகிர்ந்தார். இதனைப் பார்த்த நெட்டிசன்கள் "பட வாய்ப்புக்காக இப்படி ஷார்ட் உடையில் அவர் சுற்றித் திரிகிறார்" என கமெண்ட்ஸ்களை அள்ளி தெளித்திருக்கின்றனர்.

இதனைப் பார்த்து கடுப்பான நடிகை சிவாங்கி, பேட்டி ஒன்றில் கடுமையாக விமர்சித்து உள்ளார். அதில், "உடம்புல துணி போடாம அவுத்து காட்டுனா உடனே பட வாய்ப்பு கிடைத்திடுமா; சுத்தமாக எனக்கு புரியல. அப்படியே அவுத்து போட்டு காமிக்கிறவங்க எல்லாருக்கும் பட வாய்ப்பு கிடைச்சிருக்கா. என்ன பேசுறீங்க..? இதையெல்லாம் கேட்கும் பொழுது எனக்கு ஆத்திரம் தான் வருகிறது.

நான் சாதாரணமாகவே, இறுக்கமான ஆடைகளை அணிவதில்லை. காரணம், அப்படி இருக்கமான ஆடைகளை அணியும்பொழுது எனது உடல் பருமனாக தெரிகிறது. அதனால் ஆடைகளை மாற்றிப் பார்க்கலாம் என 'ஷார்ட்ஸ்' அணிந்து பார்த்தேன். அது எனக்கு பொருத்தமாக இருந்தது ஆதலால் அந்த உடைகளை பயன்படுத்தி வந்தேன். பட வாய்ப்புக்காக என்றும் அப்படி செய்கிறவள் நான் இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். அதுமட்டுமில்லாமல் ஒரு சிலர், உடை மாறிவிட்டால் கேரக்டரும் மாறிவிடும் என்று சொல்லுகிறார்கள். அதற்காக காலம் முழுவதும் சுடிதார் மட்டுமே அணிந்து வாழ வேண்டுமா, ஆடையில் கூட எங்களுக்கு சுதந்திரம் இல்லையா என காட்டமாக பேசியிருக்கிறார்.

இதனைப் பார்த்த நெட்டிசன்கள், ஆடைகள் என்பது அவரவர் விருப்பம், இதில் தலையிடுவது நியாயம் இல்லை. இதையெல்லாம் காதில் வாங்கினால் வாழ முடியாது சிவாங்கி, ஆதலால் உங்கள் மனம் போன போக்கில் நீங்கள் செல்லுங்கள் என கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: குக் வித் கோமாளியை தொடர்ந்து டான்சில் களமிறங்கும் நடிகை.. கவர்ச்சி லுக்கில் அசத்தல்..!