ஒரு காலத்தில் பிரபல நடிகராக இருந்தவர் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். துள்ளுவதோ இளமை படத்தில் நடித்தவர் அபிநவ். இவர், ஜங்சன், தாஸ், என்றென்றும் புன்னகை உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். திரைப்படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் விஜய் நடித்த துப்பாக்கி, சூர்யா நடித்த அஞ்சான் படங்களில் டப்பிங் குரல் கொடுத்துள்ளார்.

கார்த்தி, தமன்னா நடித்த பையா படத்தில் வில்லனுக்கு டப்பிங் பேசி இருப்பார். காக்கா முட்டை படத்தில் பாபு ஆண்டனிக்கும் குரல் கொடுத்திருப்பார். இப்படி மாஸ் ஹீரோக்களுக்கு பின்னணி குரல் கொடுத்த அபிநவ் தற்போது கேட்பாரற்று ஆபத்தான நிலையில் உள்ளார். அபிநவ்க்கு லிவர் சிரோசிஸ் என்ற நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஓடிடிக்கு வரும் பாலியல் தொழிலாளியின் கதை... ஆஸ்கர் விருதால் அதிக எதிர்பார்ப்பு!!
இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பார்ப்பதற்கு ஹீரோ போல் இருக்கும் அபிநவ் தற்போது உடல் குன்றி நொடிந்து போயியுள்ளார். அபிநவ்க்கு மேல் சிகிச்சை செய்ய ரூ.28 லட்சம் வரை தேவைப்படும் என்பதால் உதவி செய்யும் படி உருக்கமான வீடியோவை வெளியிட்டுள்ளாஅர். இதுவரை சிகிச்சைக்காக ரூ.15 லட்சம் வரை செலவழித்துள்ளதாக கூறியுள்ளார்.

இதேபோல் பழைய நடிகை பிந்துகோஸ் உடல்நலம் பாதிக்கப்பட்டு குடும்பத்தால் கை விடப்பட்டுள்ளதாக கண்ணீருடன் பேசி வீடியோ வெளியிட்டிருந்தார். பிந்துகோஸை சந்தித்த ஷகிலா, நடிகர் கேபிஒய் பாலாவிடம் தகவலளித்தார். உடனே பிந்துகோஸை அவரது வீட்டிலேயே வந்து பார்த்த கேபிஒய் பாலா ரூ.80,000 கொடுத்து உதவினார். திரைப்பட நட்சத்திரங்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு கேட்பாரற்று கிடக்கும் தகவல் அவ்வபோது வெளியாகி வருகிறது.
இதையும் படிங்க: பிரம்மாண்டமான கோயில் செட்.. சிவப்பு உடையில் நயன்தாரா.. களைகட்டிய மூக்குத்தி அம்மன் பட பூஜை..!