மகளிர் தினமான இன்று காலையில் இருந்து வாழ்த்துக்களுக்கு நன்றி சொல்ல வரும் பிரபல நடிகைகள் அனைவரும், தென்னிந்திய சினிமா நடிகர்களை குறை கூறி வருகின்றனர். அந்த அளவிற்கு தென்னிந்திய சினிமா அவர்களை பாதித்து இருக்கிறது என்பதை காண முடிகிறது. முதலில் ஜோதிகா இதனை பற்றி கூறியிருந்தார். அவர் கூறுகையில், "மற்ற சினிமாவை போல் தென்னிந்திய சினிமா இல்லை. இங்கு ஆண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் மட்டும் தான் அதிகமாக உள்ளது. பெண்களை சிறப்பு பாடல்களுக்கு கவர்ச்சி நடனமாட வைப்பதற்கும், ஆண் நடிகர்களை புகழ்ந்து பேசுவதற்கும் மட்டுமே பயன்படுத்துகிறார்கள். அந்த பழக்கம் இன்றும் இங்கு மாறவில்லை. அதனால் தான், நான் வேறு பாதையை தேடி, பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டும் தேர்வு செய்தேன். பெரும் பாலும் ஹீரோக்கள் உள்ள படங்களுக்கு நோ கூறியுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார். இதனை பார்த்து பலரும் விமர்சனம் செய்து வரும் நிலையில் தற்பொழுது மற்றொரு நடிகையும் கூறி இருக்கிறார்.

தனுஷின் பொல்லாதவன் திரைப்படத்தை இன்று நினைவு கூர்ந்தாலும் அனைவருடைய கண்களுக்கு முன்பாக வந்து செல்வது இரண்டு காரியம் ஒன்று நடிகர் தனுஷின் பைக், இரண்டாவது அப்படத்தில் அவருக்கு காதலியாக வந்த ரம்யா. இப்படம் வந்த பொழுது இந்த இரண்டு காரியங்களையும் தங்களது மனதில் நினைக்காத இளசுகளே இருக்க முடியாது. அப்படிப்பட்ட இந்த நடிகை தமிழில் குத்து, கிரி, பொல்லாதவன், தூண்டில், வாரணம் ஆயிரம், சிங்கம் புலி, உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். மேலும் கன்னட நடிகையாக வலம் வரும் ரம்யா, அப்பகுதிகளில் நிறைய படங்களை நடித்தும் இருக்கிறார்.
இதையும் படிங்க: தென்னிந்தியா சினிமா இன்றும் மாறவில்லை.. பெண்கள் என்ன கிள்ளுக்கீரையா.. ஜோதிகா ஆவேசம்..!

இந்த நிலையில், பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்று பேசிய நடிகை ரம்யா, என்னுடன் நடித்த பல நடிகர்கள் இப்போது சூப்பர் ஸ்டார்களாக இருக்கிறார்கள். நான் என்னைவிட குறைவான சம்பளம் வாங்கும் நடிகர்களோடு பணியாற்றியபோது அந்த படம் ஹிட்டானதும், அடுத்த படங்களுக்கு அதே நடிகர்கள் என்னைவிட ஐந்து மடங்கு சம்பளம் வாங்குவதை பார்த்திருக்கிறேன். நடிகர்களான அவர்களுக்கு ரூ.5 கோடி சம்பளம் கொடுத்தால், எனக்கு ரூ.1 கோடி மட்டும்தான் கொடுப்பார்கள். இருவருமே நடிகர்கள் தான், இருவரும் ஒரே வேலையை தான் செய்கிறோம். இப்படி இருக்க சம்பளத்தில் மட்டும் ஏன் இவ்வளவு வித்தியாசம் வருகிறது என புரியவில்லை.

இப்படி சினிமா துறையில் சொல்வதற்கு நிறைய விஷயங்கள் உள்ளது, அதை தைரியமாக சொல்ல முன்வருப்பவர்கள் அதிகம் இல்லை. உதாரணமாக வித்யாபாலன் திறமையான நடிகை தான், ஆனால் அவருக்கு கூட நடிகர்களுக்கு இணையான சம்பளம் கிடைப்பது இல்லை. எனவே, கன்னட சினிமாவில் பெண்களை மையமாகக் வைத்து அதிகமான படங்கள் வர வேண்டும். மாறிவரும் காலத்திற்கு ஏற்ப சரியான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து, வலுவான கதைகளை மக்களுக்கு பிடித்தவாறு தேர்ந்தெடுக்க வேண்டும் என நடிகைகளை அவர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: இளையதளபதி ஜோடியின் சூப்பர் லுக் போட்டோ.. விருது வாங்க இப்படி ஒரு காஸ்டியுமா..!