சினிமா பிரபலங்கள் முதல் அம்பானி விட்டு நிகழ்ச்சி வரை எந்த நிகழ்ச்சிகள் நடந்தாலும் அங்கு முதல் ஆளாக நிற்பவர் மாதம்பட்டி ரங்கராஜன் தான். பிரபலங்கள் இல்ல நிகழ்ச்சிகள் என்றால் 'மாதம்பட்டி ரங்கராஜன்' சமையல் இருக்க வேண்டும் என்னும் அளவிற்கு தன் சமையலை 'பிராண்ட்'ஆக மாற்றி வளர்ந்து நிற்கிறார்.அதுமட்டுமல்லாமல் ஹீரோவாகவும் வலம் வந்த மாதம்பட்டிக்கு அடுத்த ஜாக்பார்ட்டாக அமைந்தது "குக் வித் கோமாளி" ஷோ கிடைத்தது தான். அதன் பிறகு மாதம்பட்டி ரங்கராஜை தெரியாதவர்கள் யாரும் இல்லை என்பதற்கு ஏற்ப அனைவரது இல்லங்களிலும் ஒருவராக மாறி இருக்கிறார்.

இப்படி இருக்க, தனியாக சுற்றி கொண்டிருந்த இவரது வெற்றி பயணத்தில் அவருக்கு உறுதுணையாக இருக்க 'ஸ்ருதி' என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் இருவருக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர். இதனை தொடர்ந்து, ஆடை வடிவமைப்பாளரான 'ஜாய் கிறிஸில்டாவும் மாதம்பட்டி ரங்கராஜனும் காதலித்து வருவதாக சினிமா வட்டாரங்கள் முதல் வெளி உலக வட்டாரம் வரை அனைவரும் பேசிக்கொண்டு இருந்தனர்.
இதையும் படிங்க: ஹீரோவாக அவதாரம் எடுக்கும் மாதம்பட்டி.. சமையலில் கலக்கியவர் மீண்டும் சினிமாவில் கலக்க வருகிறார்..!

இவர்களின் பேச்சுக்கு ஏற்றார் போல் ஜாய் கிறிஸில்டாவும், அவரது இன்ஸ்ட்டா பகுதியில் மாதம்பட்டி ரங்கராஜன் புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். இது "எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது" போல் ஏற்கனவே பேசிக்கொண்டு இருப்பவர்களுக்கு மேலும் வலுசேர்த்து உள்ளது.

இதனால் இந்த கிசுகிசுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவெடுத்த ரங்கராஜன் மனைவி ஸ்ருதி, கடந்த மாதம் அவரது இன்ஸ்டாகிராமில் சில போஸ்ட்களை போட்டு இருந்தார். அதில், ரங்கராஜுடன் அவர் எடுத்த புகைப்படத்தையும், குடும்ப விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் பகிர்ந்து அதில் அனைவரும் கேட்கும்படி "கோடி அருவி கொட்டுதே உன் மேல" என்ற பாடலை வைத்து, கீழே 'ஆம் நான் தான் மாதம்பட்டி ரங்கராஜன் மனைவி என்று கமெண்டும் செய்து. மாதம்பட்டி ரங்கராஜை டாக் செய்து அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.

இதனை தொடர்ந்து, மாதம்பட்டி ரங்கராஜனின் முதல் பட வெற்றிக்கு காரணமான இயக்குநர் ராஜூ சரவணனுடன் மீண்டும் கூட்டணி வைத்து தனது அடுத்த படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது படம் முழுவதுமாக நிறைவடைந்ததை அடுத்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் படப்பிடிப்புகள் முடிந்து ஓய்ந்திருக்கும் வேளையில், இரண்டாம் திருமணம் குறித்த சர்சைக்கு தன் ஸ்டைலில் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் மாதம்பட்டி ரங்கராஜ். அவர் தனது இணையதள பகுதியில் "என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வலம் வரும் செய்திகள் அனைத்தையும் நான் நன்றாக அறிவுவேன். தற்போது, என் குடும்பத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து நான் பொது இடங்களில் பேச விரும்பவில்லை. அவ்வாறு நான் பேச வேண்டும் என்ற சூழல் உருவானால் கண்டிப்பாக அதற்கு நான் பதிலளிப்பேன் என தெரிவித்துள்ளார்.

இப்படி இன்று ஒரே நாளில் தனது அடுத்த படத்திற்கான அப்டேட்டையும், இரண்டாம் திருமணத்திற்கு முற்றுப்புள்ளியும் வைத்து ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுத்திருக்கிறார் ரங்கராஜ்.
இதையும் படிங்க: பெண் மீது காதல் வயப்பட்ட மாதம்பட்டி ரங்கராஜ்... உண்மையை உடைத்த அவரது மனைவி.. இனி அவ்வளவுதான்...!