ஒட்டுமொத்த இந்திய படவுலகையும் கலக்கிய படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த வரிசையில் நிச்சயம் வைத்து பார்க்கப்படும் படம் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்து, ஜீத்து ஜோசப் இயக்கிய த்ரிஷ்யம்.

2013-ம் ஆண்டு வெளியான த்ரிஷ்யம் படத்தின் முதல்பாகத்தில் மோகன்லால், மீனா, அன்ஷிபா, எஸ்தர் ஆகியோர் நடித்திருந்தனர். கதை, திரைக்கதை எழுதி இயக்கி இருந்தார் ஜீத்து ஜோசப். மகளை காப்பாற்றப் போராடும் தந்தையாக கலக்கி இருப்பார் மோகன்லால். பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கு வரவழைத்த அளவுக்கு த்ரில்லராக இப்படம் எடுக்கப்பட்டிருந்தது. மலையாளத்தில் முதலில் 50 கோடி ரூபாய் வசூலித்த படம் என்ற சாதனையை இப்படம் படைத்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய 4 மொழிகளில் இப்படம் மீண்டும் எடுக்கப்பட்டது. சிங்களம், சீனம் போன்ற மொழிகளில் கூட இப்படம் டப் செய்யப்பட்டு அசத்தல் வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: பயந்தா நாங்க பொறுப்பில்ல.. கும்பமேளாவில் திகிலூட்டும் திரில்லர் டீசர்..! மச்சக்காரி தமன்னாவ மந்தராவதி ஆக்கிட்டியே டேரக்டரு..!
இதன் தொடர்ச்சியாக 2021-ம் ஆண்டு த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது. அதுவும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெருவெற்றி பெற்றது.

இந்நிலையில் த்ரிஷ்யம் படத்திற்கு மூன்றாம் பாகம் வருமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வந்தது. இதற்கு அதிகாரபூர்வமாக பதிலளித்துள்ளார் மோகன்லால். தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் இயக்குநர் ஜீத்து ஜோசப் உடன் நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்து த்ரிஷ்யம்-3 confirmed, The past never stays silent என்ற அடைமொழியோடு இதனை உறுதி செய்துள்ளார்.

த்ரிஷ்யம் படத்தின் முதல் பாகத்தில் கேபிள் உரிமையாளராக, இரண்டாம் பாகத்தில் திரையரங்கு உரிமையாளராக வரும் மோகன்லால், தன் குடும்பத்தை பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவராக காட்சிப்படுத்தப்பட்டிருப்பார். அதுவே அந்த படத்தின் வெற்றிக்கு காரணம். மூன்றாம் பாகத்தில் எந்த மாதிரியான கதைக்களம் கையாளப்பட்டிருக்கும் என்ற எதிர்பார்ப்பு த்ரிஷ்யம் மற்றும் மோகன்லால் ரசிகர்களிடையே இப்போதே ஏற்பட்டு விட்டது.
இதையும் படிங்க: அப்ப நடிகை.. இப்ப டைரக்டர்...! கவர்ச்சி நடிகையின் கவர வைக்கும் திரைப்படம்...! சும்மா அதிருதுல்ல..!!