நடிகை கயாடு லோஹர், தனது முதல் படத்தை மனோரஞ்சன் நடிப்பில் வெளியான 'முகில்பேட்டை' என்ற கன்னட படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானார். அதன் பின் தெலுங்கில் 'அல்லூரி' என்ற படத்தில் நடித்தார். இப்படி கன்னடம் மற்றும் தெலுங்கில் நடித்து அப்பகுதியில் உள்ள அனைத்து ரசிகர்களையும் தன் வசப்படுத்தியவர் இவர். சமீபத்தில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் திரைப்படத்தில் நடித்து, தமிழ்திரையுலக கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளார்.

பிப்ரவரி 21ம் தேதி வெளியான இத்திரைப்படம் இதுவரை 50 கோடிகளுக்கு மேல் வசூலித்து நல்ல ஹிட் படமாக மாறியுள்ளது. பல ப்ரமோஷன்கள் வெளியான நிலையில், இப்படத்தை குறித்து பிரதீப் ரங்கநாதன் மேடையில் பேசும்பொழுது கண்ணீர் விட்டு கதறினார். தன்னை நடிக்கவிடாமல் அனைவரும் நெருக்குவதாகவும், நீங்கள் எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் மீண்டு வருவேன் என்றார்.அதுமட்டும் இல்லாமல் தன்னை பல ஹீரோயின்கள் நிராகரித்ததாகவும் அவர்கள் அனைவருக்கும் இந்த வேளையில் நன்றி சொல்வதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: டிராகன் பட நடிகையின் அடுத்த படம் காதல் மன்னனுடன்... மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

மேலும் நான் இந்த டிராகன் படத்திற்கு வரும்பொழுது ஹீரோயின் யார்? என கேட்ட பொழுது இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, நடிகை கயாடு லோஹர் என்று சொன்னார். இதனை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த நான் முதலில் நம்ப வில்லை பிறகு தான் நம்பினேன், இந்தநிலையில், தன்னுடன் நடிக்க ஒப்புக்கொண்ட கயாடு லோஹர்க்கு நன்றி தெரிவித்தார்.அதுமட்டுமல்லாமல் படம் வெளியாவதற்கு முன்பே அவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகரித்து விட்டதாகவும் கூறியிருந்தார்.

இப்படி இருக்க, நடிகை கயாடு லோஹர்க்கு தமிழ்நாட்டில் ரசிகர்கள் உருவாக தொடங்கி உள்ளனர். இந்த நிலையில், தமிழில் தனது அடுத்த படமான 'இதயம் முரளி' படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் பிரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், நட்டி, ரக்ஷன், பிரக்யா, ஏஞ்சலின் மற்றும் யஷாஸ்ரீ ஆகியோரும் நடிக்கின்றனர்.

இந்த சூழலில், தனது எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு உள்ளார் நடிகை கயாடு லோஹர், அதில் "எனக்கு எப்படி தொடங்குவது எனத் தெரியவில்லை. தனக்கும் டிராகன் படத்திற்கும் அதில் வரும் பல்லவி கதாபாத்திரத்தீர்க்கும் கிடைக்கும் வரவேற்பு இதுவரை எங்கும் கிடைக்காத ஒன்று. இப்படத்தை திரையரங்கில் பார்க்கும் ரசிகர்கள் எனக்கு அடிக்கும் விசிலாகட்டும், இன்ஸ்டாவில் அழகான கமெண்ட்ஸ், எடிட் ஆகட்டும் இதெயெல்லாம் பார்க்கும்போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. நான் தமிழ்ப்பொண்ணும் இல்லை. எனக்கு தமிழும் சரியாக பேசவராது. ஆனால், நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்பு விலைமதிக்காதது. இந்த அன்பை எனது படங்களின் மூலம் திருப்பி உங்களுக்கு தருவேன் என கூறியுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், உங்கள் நடிப்பிற்கு எவ்வளவு அன்பை வேண்டுமானாலும் தரலாம் என கூறி மகிழ்ந்து வருகின்றனர். ஆனால் அன்பு ஒன்றுதான் அநாதை என்பதை போல் தமிழில் நடிக்காமல் எங்களை ஏமாற்றி விடாதீர்கள் எனவும் கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: டிராகன் பட நடிகையின் அடுத்த படம் காதல் மன்னனுடன்... மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!