தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரத்னா அறிவழகனுடன் வண்டியில் வந்து இறங்க வெங்கடேஷ் கடுப்பாகி அறிவழகன் சட்டையை பிடித்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, அறிவழகன் நான் ஒன்னும் ரதனாவை கட்டபயப்படுத்தி கூட்டிட்டு வரல.. நீ என்கிட்டே சண்டை போடுறத விட்டுட்டு நல்ல புருஷனா நடந்துக்கோ என்று பதிலடி கொடுத்து கிளம்பி செல்கிறான்.

அடுத்ததாக வீரா மற்றும் சிவபாலன் ஆகியோர் பேசி கொண்டிருக்க வீரா கண்ணில் தூசி விழ சிவபாலன் ஊதி தூசியை எடுக்க முயற்சி செய்கிறான். இந்த சமயத்தில் அந்த வழியாக வந்த சௌந்தரபாண்டி இதை பார்த்து இருவரும் முத்தம் கொடுப்பதாக தப்பாக நினைத்து நெஞ்சை பிடித்து உட்காருகிறார்.
இதையும் படிங்க: அழகில் சிறைபிடிக்கும் அர்ச்சனா ரவிச்சந்திரனின் போட்டோஸ்!
இந்த ஷண்முகம் குடும்பத்துல இருந்து இன்னொருத்தி என் வீட்டு மருமகளா வந்துடுவா போலயே என்று பதறுகிறார். வீராவும் சிவபாலனும் சௌந்தரபாண்டி நெஞ்சை பிடித்து உட்கார்ந்ததை பார்த்து பதறுகின்றனர். தண்ணீர் கொண்டு வந்து கொடுக்கின்றனர்.
இதையடுத்து ரத்னா தலைக்கு குளித்து தலையை துவட்டிய படி இருக்க வெங்கடேஷ் பின்பக்கமாக வந்து அவளை கட்டியணைத்து நெருங்க நினைக்க முத்துப்பாண்டி வெங்கடேஷை அடித்து துவைக்கிறான். பொண்டாட்டியா இருந்தாலும் விருப்பம் இல்லாமல் கையை வைக்க கூடாது, நோ மீன்ஸ் நோ தான் என்று பாடம் புகட்டுகிறான்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
இதையும் படிங்க: உண்மை அறிந்து உடைந்து போகும் ராஜராஜன்; கார்த்திக் செய்ய போவது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்!