சமீபத்தில் நடிகை ஜோதிகா மற்றும் ரம்யா ஆகியோர் தென்னிந்திய சினிமாவில் நடிகைகளுக்கு சம்பளம் அதிகமாககொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்தனர். மேலும், நடிகர்களுக்கு இணையாக தங்களை மதிப்பதில்லை என்றும் வருத்தத்தை தெரிவித்தனர். இவர்களின் இந்த பேச்சுக்கள் சினிமா வட்டாரத்தில் பூகம்பத்தை கிளப்பியிருந்த வேளையில், அதனை சற்று தணிக்கும் வகையில் நடிகை நயன்தாரா இனி தன்னை "லேடி சூப்பர் ஸ்டார்" என யாரும் அழைக்க வேண்டாம் எனக் கூறியிருந்தார். இதுவும் மிகப்பெரிய பூதாகரமாக வெடிக்க தற்பொழுது அனைவரும் அவர்கள் வேலையில் பிஸியாக இருக்கின்றனர்.

தற்போது வரை தமிழ் சினிமாவில் அதிக அளவில் பேசப்படும் நடிகைகள் என்றால் ஒன்று திரிஷா மற்றொன்று நயன்தாரா. அதிலும் நடிகை அனுஷ்காவுக்கு உடலில் எந்தவித பாதிப்புகளும் இல்லாமல் இருந்திருந்தால் இன்று அவர்தான் "லேடி சூப்பர் ஸ்டார்" என பலரும் பேசி வருகின்றனர். இந்த சூழலில் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளாக வலம் வந்த திரிஷா மற்றும் நயன்தாரா இருவரையும் பின்னுக்கு தள்ளி சம்பளத்தில் அதிரடி காட்டி உள்ளனர் நடிகைகள். அந்த வரிசையில் கோலிவுட் சினிமாவில் இன்று டாப் சம்பளம் வாங்கும் நடிகைகள் வரிசையில் இடம் பெற்றிருப்பவர் நடிகை சாய் பல்லவி.
இதையும் படிங்க: திருமண விழாவில் குத்தாட்டம் போட்ட சாய்பல்லவி..! அப்படி யாருடைய கல்யாணமா இருக்கும்..?

கடந்த 2024 ஆம் ஆண்டு வரை தனது சம்பளத்தை ரூ.5 கோடியாக மட்டுமே வைத்திருந்த நடிகை சாய்பல்லவி, 'அமரன்' படத்திற்குப் பின்பு தனது சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல படங்களில் நடித்த சாய்பல்லவி, தற்பொழுது பாலிவுட்டில் ராமாயணம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு அவர் சம்பளமாக ரூ.18 கோடி முதல் ரூ.20 கோடி வரை சம்பளம் பேசி நடித்து இருக்கிறார். இப்படி அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் வரிசையில் பார்க்கும் பொழுது தற்சமயம் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் நயன்தாராவை பின்னுக்கு தள்ளி நம்பர் ஒன்னில் நிற்கிறார் சாய்பல்லவி.

தனது முதல் இடத்தை பறிகொடுத்து இரண்டாவது இடத்தில் நிற்கும் நடிகை நயன்தாரா, தற்பொழுது 'டெஸ்ட்' என்கின்ற ஓ.டி தளத்தில் வெளியாகும் திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். இப்படத்திற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் வேளையில், சமீபத்தில் ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் "மூக்குத்தி அம்மன்" இரண்டாவது பாகத்தில் இவர் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. இதனை அடுத்து இப்படத்தில் நடிக்க நயன்தாராவுக்கு ரூ.15 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

தற்பொழுது கர்நாடகாவில் பிரச்சனையில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கும் "ராஷ்மிகா மந்தனா" சம்பளத்தில் மூன்றாவது இடத்தை பெற்று இருக்கிறார். சினிமாவில் அனைத்து நடிகர்களுடனும் நடித்து வருகின்ற நடிகை ராஷ்மிகா, தற்பொழுது பாலிவுட்டில் சல்மான் கானுக்கு ஜோடியாக "சிக்கந்தர்" என்ற படத்தில் நடித்து உள்ளார். தற்போதைய நிலவரப்படி இப்படத்திற்காக அவர் ரூ.13 கோடி சம்பளம் வாங்கி உள்ளார்.

எப்பொழுதும் சம்பளத்திலும் சரி...படத்திலும் சரி...டாப் நம்பர் ஒன்னாக இருந்த நடிகை திரிஷா, தற்பொழுது சம்பளத்தில் பின்தங்கி.. நடிப்பிலும் பின்தங்கி, 'நான்காவது' இடத்தை பிடித்து இருக்கிறார். 90களில் கனவு நாயகியாக திகழ்ந்த திரிஷா தற்பொழுது 96 படத்திலும், லியோ படத்திலும், விடாமுயற்சி படத்திலும் நடித்து இன்றைய இளசுகளையும் தன் வசப்படுத்தி வைத்திருக்கிறார். இப்படி இருக்க, இவர் தற்போது 'விஸ்வம்பரா' என்ற படத்திற்காக ரூ.12 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறார். இப்படி நடிகைகளின் வரிசைகளில் நான்காவது இடத்தை பிடித்திருக்கிறார் நடிகை திரிஷா.

ஐந்தாவது இடத்தில் இருப்பது நடிகை சமந்தா. எப்படி நடிகை அனுஷ்கா உடல் நலம் பாதிக்கப்பட்டு சினிமாவிலிருந்து விலகி இருந்தாரோ அதேபோல் மனநிலை பாதிக்கப்பட்டு சினிமாவுக்கே சிறிது காலம் இடைவெளி விட்டவர் தான் நடிகை சமந்தா. தனது திருமண வாழ்க்கையில் இருந்து விவாகரத்து பெற்று வெளியே வந்த நடிகை சமந்தா, சிறிது நாட்கள் படம் நடிக்காமல் தற்பொழுது மீண்டும் படத்தை நடிக்க ஆரம்பித்து இருக்கிறார். மேலும் இவரது தயாரிப்பில் உருவாக இருக்கும் படத்தின் டைரக்டரான நந்தினிக்கு சம்பளத்தை உயர்த்தி கொடுத்து இருக்கிறார் என கூறப்பட்டது. அதே வேளையில் சமீபத்தில் வெளியான "சிட்டா பெல்" வெப் தொடருக்கு ரூ.10 கோடி சம்பளமாக பெற்றுள்ளார்.

இப்படி,பல நடிகைகள் சம்பளம் வாங்கி இருந்தாலும் தற்பொழுது வரை இவர்கள் ஐந்து பேரும் தான் நடிப்பிலும் சம்பளத்தில் டாப் 5வில் இருக்கின்றனர்.
இதையும் படிங்க: இந்தியாவை தொடர்ந்து அமெரிக்காவில் அடியெடுத்து வைக்கும் "அமரன்".. உலக ஃபேமஸ் ஆக மாறும் சிவகார்த்திகேயன்..!