தமிழ் திரையுலகில் தளபதியாக விளங்கும் நடிகர் விஜயை சினிமாவில் நுழைத்த பெருமை அவரது தந்தையான எஸ். ஏ.சந்திரசேகர் தான். இவர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்த விஜய். இன்று அரசியல் கட்சி ஆரம்பிக்கும் அளவிற்கு வளர்ந்து தனக்கென ரசிகர்களை உருவாக்கி வைத்திருக்கிறார். ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் வலம் வந்தவர், நாளடைவில் அவரது தந்தையின் உதவியுடன் கதாநாயகனாக அறிமுகமான முதல் திரைப்படம் "நாளைய தீர்ப்பு".

இப்படத்தில் விஜயை பார்த்த மக்கள் முதலில் அவரை ஏற்று கொள்ளவில்லை அதன் பின், நடிகர் விஜயகாந்த்துடன் "செந்தூரப் பாண்டி" என்ற திரைப்படத்தில் விஜய் இணைந்து நடித்தார். அடுத்து விஜய் நடித்த "ரசிகன்" படத்தில் இவரது நடிப்பை பார்த்த பின்பு இவரை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்த ரசிகர்கள் நாளடைவில் அவருக்கு "இளைய தளபதி" என்ற அடைமொழி பெயர் வைத்து கொண்டாடினர். இப்படி பல படங்களில் நடித்த விஜயின் முதல் பத்து படங்கள் ஹிட் கொடுக்கவில்லை என்றாலும் அதன்பின் வந்த அனைத்து படங்களும் ஹிட் ஆக ஆரம்பித்தது.
இதையும் படிங்க: அஷ்வத் மாரிமுத்துவை அழவைத்த நடிகர் விஜய்.. இப்படி பண்ணிட்டாரே.. போஸ்ட் போட்டு இயக்குனர் கதறல்..!

இதனை தொடர்ந்து, 1996-ல், இயக்குநர் விக்ரமன் இயக்கிய "பூவே உனக்காக" திரைப்படம் விஜய்க்கு மிகவும் திருப்புமுனையாக அமைந்தது. அதன் பின் வரிசையாக லவ் டுடே, ஒன்ஸ்மோர், நேருக்கு நேர், காதலுக்கு மரியாதை, மின்சாரக் கண்ணா என 90காலங்களை தாண்டி 2000த்திலும் காலடி எடுத்து வைத்தார். அதில் கண்ணுக்குள் நிலவு, குஷி மற்றும் பிரியமானவளே, ப்ரண்ட்ஸ், பத்ரி, ஷாஜஹான், யூத் ,பகவதி, வசீகரா, சிவகாசி, போக்கிரி, குருவி, தெறி,பிகில்,வாரிசு, மெர்சல் என பல படங்களை நடித்து தனது கடின உழைப்பால் இன்று ஸ்டாராக வாழ்ந்து வருகிறார்.

இப்படி பட்ட நடிகர் விஜய் தற்பொழுது தனது அரசியல் வாழக்கையை முற்றிலும் விட்டு முழு நேர அரசியலில் ஈடுபட இருக்கிறார். அதற்காக தனது கடைசி படமான ஜனநாயகம் திரைப்படத்தில் தற்பொழுது நடித்து வருகிறார். இப்படம் வரும் 2026ம் ஆண்டு பொங்கல் அன்று வெளியாக உள்ளது.
இப்படி இருக்க, ட்விட்டர் வாசி ஒருவர், Grok செயலியிடம், தமிழ் சினிமாவில் வெளியான படங்களில் மிகவும் மோசமான படங்கள் எது என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு, அந்த செயலி, சற்றும் தாமதிக்காமல் நடிகர் விஜய் படங்களைப் பட்டியலிட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த டுவிட்டர் வாசி தனது எக்ஸ் தளபக்கத்தில் அதனை பகிர்ந்து உள்ளார்.

விஜயின் மோசமான பட பட்டியலில் முதலில் இருப்பது விஜயின் 50-வது திரைப்படமாக 2010ம் ஆண்டு வெளியான "சுறா", எஸ் பி ராஜ்குமார் இயக்கத்தில், மணி ஷர்மா இசையில்,விஜய், தமன்னா, தேவ் கில், ஸ்ரீமன், மதன்பாபு, ரியாஷ் கான், ராதாரவி, வையாபுரி, யுவராணி, இளவரசு, மூர்த்தி மற்றும் வடிவேலு ஆகியோரின் நடிப்பில் உருவான திரைப்படம் தான் "சுறா". இப்படத்தில் மீனவராக இருக்கும் சுறா,தனது மக்களது வீடுகளை இடித்து அவர்களை வெளியே அனுப்ப போராடும் அரசியல் வாதியை பழிவாங்க, பணக்கார கேங்ஸ்டராக மாறி மக்களுக்கு நல்லது செய்வார்.

இரண்டாவதாக 2013ம் ஆண்டு பல பிரச்சனைகளை சந்தித்து வெளியான "தலைவா" திரைப்படம். சந்திர பிரகாஷ் ஜெயின் தயாரிப்பில், ஏ. எல். விஜய் இயக்கத்தில், நடிகர் விஜய் கதாநாயகனாகவும், அவருக்கு இணையாக அமலா பாலும் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சத்தியராஜும், மலையாள நடிகர் ராஜீவ் பிள்ளையும் நடித்துள்ளனர். முற்றிலும் அரசியல் சார்ந்த இத்திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு முதலில் அண்டை மாநிலங்களில் வெளியானது. அதற்கு பிறகு 12 நாட்கள் கழித்து தமிழகத்தில் வெளியானது.

மூன்றாவதாக 2015ம் ஆண்டு வெளியான "புலி" திரைப்படம். இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், பிரபு, ஸ்ரீதேவி, சுதீப், ஹன்சிகா மோட்வானி, சுருதி ஹாசன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் புலி.

நான்காவது இடத்தில் 2014ம் ஆண்டு வெளியான "ஜில்லா", இயக்குநர் இரா.தி நேசன் இயக்கத்தில், டி. இமான் இசையில், மோகன்லால், விஜய், காஜல் அகர்வால், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் நடிப்பில் 2014 ஜனவரி 10 ஆம் தேதி தைப்பொங்கல் அன்று வெளிவந்த திரைப்படம் தான் ஜில்லா. இப்படத்தில் வரும் அனைத்து பாடல்களும் இன்றளவும் ஃபேமஸ்.

ஐந்தாவது இடத்தில் 2017ம் ஆண்டு வெளியான வர்லாம் வர்லாம் வா "பைரவா".இயக்குனர் பரதன் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில், விஜய், கீர்த்தி சுரேஷ், ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி மற்றும் பல நட்சத்திரங்கள் ஒன்று கூடி நடித்த நகைச்சுவை கலந்த அதிரடி மற்றும் காதல் திரைப்படம் தான் "பைரவா". இப்படத்தில் வங்கியில் பணம் வசூலித்து தரும் பணியில் வேலை செய்யும் விஜய் காதலிக்காக அவரது பிரச்சனைகளை தன் பிரச்சனைகளாக மாற்றி கொள்வார்.

இப்படி அவரது படங்களை பற்றி எக்ஸ் செயலி கூறியிருப்பது அரசியலால் நடந்த செயலா...? அல்லது உண்மையிலேயே செயலியின் தவறுகளால் நடந்த செயலா..? என விஜய் ரசிகர்கள் சந்தேகித்து கடுப்பில் உள்ளனர்.
இதையும் படிங்க: கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹூசைனியின் கடைசி கோரிக்கை.. தவெக தலைவர் விஜய் நிறைவேற்றுவாரா..?