பாலிவுட் மற்றும் கோலிவுட் மார்க்கெட்டில் நடிகை தமன்னா பாட்டியா கலக்கி வருபவர். சிறிது காலம் தமிழ் சினிமாவில் காணாமல் போன தமன்னா திடீரென ஜெயிலரில் "காவாலையா" பாடலில் நடனம் ஆடி ரசிகர்ளை குஷி படுத்தினார். சமீபத்தில் வெளியான அரண்மனை 4ல் குழந்தைகளுக்கு தாயாகவும் நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றார்.

பார்க்கவே பக்தி மையமாகவும், மந்திரவாதிக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கும் மரணத்தை கண்களுக்கு முன்பாக காட்டும் அளவிற்கான தோற்றத்தில் தமன்னாவின் ஒடெலா 2 போஸ்டர் வெளியானது. சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் தயாரிப்பில் அசோக் தேஜா இயக்கியத்தில் அஜனீஷ் லோக்நாத் இசையமைப்பில் 2022ல் வெளியான ஒடேலா ரயில் நிலையத்தின் தொடர்ச்சி கதை தான் "ஒடெலா 2". ஒடேலா மல்லண்ண சுவாமி தனது கிராமத்தை தீய சக்திகளிடமிருந்து எவ்வாறு பாதுகாக்கிறார் என்பதை சித்தரிக்க கூடிய இப்படத்தின் படப்பிடிப்பு 2024 மார்ச் அன்று வாரணாசியில் தொடங்கிய நிலையில் தற்பொழுது படப்பிடிப்பு முடிந்து எடிட்டிங் வேலைகளும் முடிக்கப்பட்டு வெளியீட்டுக்காக காத்திருக்கிறது.
இதையும் படிங்க: சமந்தா எடுத்த விபரீத முடிவு.. இல்லத்தரசிகளும் எடுத்தால் நன்றாக இருக்கும்... இணையவாசிகள் நாசுக்காக குமுறல்..!

இந்த நிலையில் வருகின்ற பிப்ரவரி 22ம் தேதியான இன்று கும்பமேளாவில் இப்படத்திற்கான டீசர் வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தனர். அதே போல் இன்று இப்படத்திற்கான டீசர் வெளியாகி பயங்கர புயலை கிளப்பியுள்ளது. யுவா, நாக மகேஷ், வம்சி, ககன் விஹாரி, சுரேந்தர் ரெட்டி, பூபால் மற்றும் பூஜா ரெட்டி ஆகியோருடன் தமன்னா பாட்டியா, ஹெபா பட்டேல், வசிஷ்ட என். சிம்ஹா ஆகியோர் பார்க்கவே பயங்கரமாக நடித்திருப்பது டீசரை பார்த்தாலே தெரிகிறது.

நார்னியாவில் சிங்கத்தின் கர்ஜனைக்கு தண்ணீர் எழுந்து நிற்கும் காட்சி போல், இந்த டீசரில் பஞ்ச பூதங்களை அடக்கி வைப்பவன் என தண்ணீர் எழுந்து ஐந்து முகங்களுடன் பேசும் என வசனம் புல்லரிக்கிறது. இதிலும் மொத்த மந்திரவாதியாக மாறிய தமன்னா ஆன்மிக உடையில் எதிரிகளிடம் சண்டை போட்டு மிரட்டுகிறார்.
ஆன்மிகத்தையே மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமாக இருக்கும் என ரசிகர்கள் கூறி வந்த நிலையில் அதனை உண்மையாக்கும் வகையில் அமைந்துள்ளது இந்த படத்தின் டீசர்.
இதையும் படிங்க: ஒரே டீவி.. இரண்டு ஹீரோயின்... இந்த சீரியல் பிரபலத்துக்கு வளைகாப்பா..!