மூக்குத்தி அம்மன் 2 படத்தின் படப்பூஜை தொடங்க உள்ள நிலையில் ரஜினி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் படம் வசூலிலும், விமர்சனத்திலும் அதிக வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மூக்குத்தி அம்மன்2 படம் தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இப்படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கப்போவதில்லை என்று அறிவிக்கப்பட்டது.

ஆர்.ஜே. பாலாஜிக்கு பதிலாக சுந்தர்.சி மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இப்படத்தை வேல்ஸ் நிறுவனம், ரௌடி பிக்சர்ஸ், அவ்னி சினி மேக்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இதில் நயன்தாரா முக்கிய ரோலில் நடிக்கிரார். முதல் பாகம் மினிமம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. ஆனால் மூக்கு அம்மன் 2 படத்தை பிரமாண்டமாக எடுக்க வேல்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதையும் படிங்க: அடுத்தடுத்து ட்ரீட் கொடுக்கும் லோகேஷ் கனகராஜ்.. கூலி டீசர் வெளியாகும் தேதியை அறிவித்து அட்டகாசம்..!
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வேல்ஸ் நிறுவனர் ஐசரி கணேஷ் சந்தித்துள்ளார். தான் தயாரிக்க போகும் மூக்குத்தி அம்மன் 2 படம் குறித்து பேசி வாழ்த்து பெற்றார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பூஜை சென்னையில் நாளை பிரமாண்டமாக நடந்து வருகிறது. இதை தொடர்ந்து மார்ச் 15ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது.

படத்தில் யாரெல்லாம் நடிக்க உள்ளனர் என்ற தகவல் வெளியாகவில்லை. இப்படத்துக்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைப்பாளர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுந்தர் சி இயக்கத்தில் அண்மையில் வெளியான மத கஜ ராஜா திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து வடிவேலு நடிப்பில் கேங்கர்ஸ் திரைப்படம் வெளிவர உள்ளது. முன்னதாக மூக்குத்தி அம்மன் படத்தில் அருண் விஜய், நயன்தாராவுக்கு வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. எனினும் இதுவரை மற்ற நடிகர்கள் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.
இதையும் படிங்க: கூலி படத்தில் "பூஜா ஹெக்டே".. அடுத்த அப்டேட் வெளியிட்ட சன் பிக்சர்ஸ்..!