கன்னட திரைப்பட நடிகை ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ளார். இதனால், அவரது குடும்பத்தினர் அவமானத்தை சந்தித்து வருகின்றனர். கர்நாடக பிரிவைச் சேர்ந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரி டிஜிபி கே.ராமச்சந்திர ராவின் வளர்ப்பு மகள் ரன்யா ராவ் 14 நாள் நீதிமன்றக் காகாவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தனது மகள் கைது செய்யப்பட்டது குறித்து டிஜிபி கே.ராமச்சந்திர ராவ் மனம் நொந்துள்ளார்.
கர்நாடக மாநில காவல் வீட்டுவசதி கழகத்தின் டிஜிபி கே.ராமச்சந்திர ராவ், இதுகுறித்து பேசுகையில், ''எனது மகளுடன் பல நாட்களாக தொடர்பில் இல்லை. இந்தச் செய்தியை ஊடகங்களில் பார்த்தபோது, அவர் அதிர்ச்சியடைந்தேன். இது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. எல்லா தந்தையும் போலவே, நானும் அதிர்ச்சியடைந்தேன். ரன்யா எங்களுடன் வசிக்கவில்லை. அவள் தன் கணவரைப் பிரிந்து வாழ்கிறாள். ரன்யாவுக்கு சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது.

எனது மகளின் குடும்பத்தில் ஏதோ பிரச்சனை இருக்கலாம். குடும்ப காரணங்களால் அவர்களுக்கு இடையே சில பிரச்சனைகள் இருக்கலாம். என்ன நடந்தாலும், சட்டம் தன் வேலையைச் செய்யும். இன்றுவரை, எனது ஐபிஎஸ் சேவையில் எந்த கரும்புள்ளியும் இல்லை. இந்த விஷயத்தில் நான் வேறு எதுவும் சொல்ல விரும்பவில்லை.
இதையும் படிங்க: அந்த மாதிரியான காட்சியில் நான் நடிக்க காரணம் கமல் தான்..! நடிகை திவ்யபாரதி ஓபன் டாக்..!
ரன்யா 4 மாதங்களுக்கு முன்பு ஜதின் ஹுக்கேரியை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு அவள் எங்கள் வீட்டிற்கு ஒருபோதும் வந்ததில்லை. அவளுடைய கணவர் ஜதினின் தொழில் மற்றும் அவரது குடும்ப விவகாரங்கள் பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. இது எங்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளிக்கிறது. ஏதேனும் மீறல் நடந்திருந்தால், சட்டம் அதன் வேலையைச் செய்யும்'' எனத் தெரிவித்துள்ளார்.

கன்னட திரைப்பட நடிகை ரன்யா ராவ் துபாயில் இருந்து திரும்பும் போது 14 கிலோ தங்கத்தை சட்டவிரோதமாக எடுத்து வந்ததார் அப்போது அவர் அதிகாரிகளின் சோதனையில் இருந்து தப்பிக்க முயன்றார். ஆனால் பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். ரன்யா ஒரு சில நாட்களுக்குள் 10 முறை துபாய்க்குப் பயணம் செய்திருந்தார்.
எனவே டிஆர்ஐ அதிகாரிகளுக்கு அவரது நடவடிக்கைகள் மீது சந்தேகம் ஏற்பட்டது. இந்த வழக்கில் மேலும் பலர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதிகாரிகள் ரன்யாவின் வீட்டை சோதனை செய்து சில ஆதாரங்களை சேகரித்தனர். ரன்யா, மாணிக்யா மற்றும் பட்கி ஆகிய கன்னட படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை.
இதையும் படிங்க: கன்னிகாவுக்கு முத்தம் கொடுத்த சினேகன்.. குழந்தை பிறந்த சில நாட்களில் கன்னிகாவின் விபரீத முடிவு..!