இன்று பல கனவுகளுக்காக உழைக்க தயாராகிய இளசுகள், தான் படித்த படிப்புக்குண்டான வேலையும் செய்து, மீதி நேரங்களில் பார்ட் டைம் ஒற்காக டெலிவரி, டாக்ஸி, பில்லிங் என தூங்க கூட நேரமில்லாமல் உழைத்து வருகின்றனர். இதனால் மன அழுத்தம், வேதனை, காதல் தோல்வி, குடும்ப சுமை என அனைத்தையும் தலையில் போட்டு புழுங்கி வருகின்றனர். இப்படி சோர்ந்து போன இளசுகளை குஷிப்படுத்த இசையமைப்பாளர்களின் கான்சட் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதில் இதுவரை ஜி.வி பிரகாஷ், ஏ.ஆர் ரகுமான், விஜய் ஆண்டனி, ஹிப் ஹாப் ஆதி, யுவன்சங்கர் ராஜா போன்றோரின் கான்சட் நடைபெற்று பெரிய வரவேற்பை ஏற்படுத்தியது.

அதன் தொடர்ச்சியாக பிரபல நடன கலைஞரான பிரபு தேவாவின் நடன கான்சட் சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், குத்தாட்டம் என அன்று நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் இன்று வரை அதே நினைப்பில் உள்ளனர்.
இதையும் படிங்க: பக்தி பரவசத்தில் கத்ரீனா கைஃப்..! அப்போ தமன்னா... இப்ப கத்ரீனா...அடுத்து யாரோ..! இப்படியும் புனித நீராடலாமா..!

இப்படியிருக்க, இந்த நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன், ஸ்ருஷ்டியும் பங்கேற்று நடனம் ஆட இருந்த நிலையில், நிகழ்ச்சி ஏற்பாட்டளார்களிடம் இருந்து தனக்கு மரியாதை கிடைக்கவில்லை, சரியான திட்டமிடல் இல்லை என சொல்லி அந்த ஷோவில் இருந்து விலகினார். ஆனால் இந்த முடிவுக்கு பிரபுதேவா காரணம் இல்லை, ஏற்பாட்டாளர்களே என தனது வேதனையை அவரது இன்ஸ்டாவில் பகிர்ந்து இருந்தார். இதனை பார்த்து தயக்கத்துடன் நிகழ்ச்சிக்கு சென்ற ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர். அந்த அளவிற்கு நிகழ்ச்சி வெறித்தனமாக இருந்துள்ளது.

இந்த கான்சட்டில், பிரபு தேவாவின் மகன், சாண்டி மாஸ்டர், நடிகர்கள் பரத், சாந்தனு, நாகேந்திர பிரசாத், நடிகைகள் லட்சுமி ராய், ரித்திகா சிங், அதிதி ஷங்கர், பார்வதி நாயர், சாக்ஷி அகர்வால் ஆகியோர் பிரபு தேவாவுடன் நடனமாடி அனைவரையும் கொண்டாட வைத்தனர். அதிலும் காலத்தால் அழியாத "ஊர்வசி ஊர்வசி" பாடலுக்கு பிரபுதேவா ஆடியது தான் ஹார்ட் டச். அதுமட்டும் அல்லாமல் இந்த நிகழ்ச்சியில் நடிகர் S.J சூர்யா, வடிவேலு, தனுஷ், பாக்கியராஜ், நடிகைகள் ரோஜா, மீனா, ரம்பா, சங்கீதா உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.

சிறிது நேரம் மேடையில் ஆடி கொண்டிருந்த பிரபு தேவா திடீரென கீழே இறங்கி நடிகர் தனுஷுடன் "ரௌடி பேபி" பாடலுக்கு நடனம் ஆடி, இருவருமே அமர்களப்படுத்தினர். அடுத்ததாக நடிகர் எஸ்.ஜே.சூர்யா உடன் "காத்தடிக்குது காத்தடிக்குது" பாடலுக்கு பிரபுதேவா இணைந்து நடனமாடியது தற்பொழுது ட்ரெண்டிங்கில் உள்ளது. மேலும் அமைதியாக அமர்ந்திருந்த வடிவேலுவை வம்பிழுத்து அவர் வாயிக்குள் விரலை விட்டு முடியை கலைத்து 'பேட்ட ராப்' பாடலுக்கு இருவருமே வைப் செய்தனர்.

இப்படி பலரது சிரிப்பலைகளுடன் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை அடைய, அப்போது திடீரென குறுக்கிட்ட நடிகர் வடிவேலு, இந்த நிகழ்ச்சிக்கு, நீங்க வந்தே ஆக வேண்டும் என பிடிவாதம் செய்து வரவச்சாரு பிரபுதேவா. இங்கு வந்ததுல ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு. ஆனால் அவருக்காக வந்த என்ன பாராட்டாம என் வாய்க்குள்ள விரல்ல விட்டு ஆட்டிகிட்டு இருக்காரு. இப்படித்தான் சூட்டிங்லையும் பண்ணுவாரு. நீங்க நம்புலைனா அதற்கு ரோஜாதான் சாட்சி. உண்மையிலேயே தமிழ் நாட்டிற்கு கிடைச்ச வரப்பிரசாதம், இந்தியாவிற்கு கிடைச்ச மைக்கல் ஜாக்ஷன் பிரபுதேவா தான் என்றால் மிகையாகாது. இத நான் மட்டும் சொல்லல, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மாவே, இவரு நமக்கு கிடைச்ச மிகப்பெரிய பொக்கிஷம்னு சொல்லிருக்காங்க என கூறினார்.

இப்படி அனைவரும் வைப் செய்த வீடியோக்களை பார்த்து வரும் ரசிகர்கள், அடுத்த முறை இன்னும் பிரமாண்டமான இடத்தில் பலரும் கலந்து கொள்ளும் வகையில் கான்சர்ட் நடத்த வேண்டும் என நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாதவர்கள், பிரபுதேவாவிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: உங்க சிரிப்புக்கு நாங்க கேரண்டி...நான் செஞ்ச புன்னியம் தான் இந்த படத்தில் நடிப்பது..மாளவிகா மோகனன் நெகிழ்ச்சி..!