"என்ன கொடுமை சரவணன்" என்றால் நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது பிரேம்ஜி. வாழ்க்கைய யோசிங்கடா தலையெழுத்தை நல்லா மாத்துங்கடா என பாடலில் தத்துவத்தை சொல்லி இளைஞர்கள் பட்டாளத்தையே தன் கையில் வைத்த இவர் வாழ்க்கையை யோசித்தார் ஆனால் தலையழுத்தை மாற்றும் திருமணத்தை பற்றி யோசிக்காமல் இருந்தார். இவர் படம் நடிக்காம கூட இருப்பாரு ஆனா நட்புக்கள் இல்லாம இருக்க மாட்டாரு. அப்பாடி ஓடி ஆடி திரிந்த மனுஷன் இன்று கால் கட்டு போடப்பட்டு எப்படி இருக்கிறார் தெரியுமா.

பிரபல இசையமைப்பாளரும் இயக்குநர் கங்கை அமரனின் மகனான பிரேம்ஜி. இசையமைப்பாளர், பின்னணி பாடகர், பாடலாசிரியர், நடிகர், என பல திறமைகளைக் தன் வசம் வைத்திருப்பவர். எப்படி தம்பிராமையா தனது தம்பி இல்லாமல் படம் எடுக்க மாட்டாரோ அதேபோல் இயக்குநர் வெங்கட் பிரபு இவர் இல்லாமல் எந்த படத்தையும் எடுக்க மாட்டார். அப்படி இவரையும் சேர்த்து இயக்கிய படங்கள் தான் மங்காத்தா, கோட், சரோஜா, சென்னை 600028, மாநாடு, கோட் முதலானவை. 40 வயதுக்கு மேலாகியும் எல்லா படத்திலும் பாடலுடனே இருக்கும் பிரேம்ஜி எப்பொழுது தனது மனைவியுடன் வருவார். இந்த முரட்டு சிங்கில் அவதாரத்தை எப்போது கலைப்பார் என பலரும் கேட்டு வந்தனர்.
இதையும் படிங்க: காத்திருப்பே வெறி ஏற்றுதே..! அடுத்த டீசருக்கான அப்டேட்.. இதயத்துடிப்பை எகிற வைக்கும் படம்..!

இந்த நிலையில், கடந்த ஆண்டு சேலத்தை சேர்ந்த 'இந்து' என்ற பெண்ணை திருத்தணி முருகன் கோயிலில் வைத்து காதல் திருமணம் செய்து கொண்டார். அப்பொழுது தான் பிரேம்ஜி காதலிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்தது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் பிரேம்ஜியின் நெருங்கிய நண்பர்களான "சென்னை 28" படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் அனைவரும் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். தனது திருமணத்திற்கு பின் தனது மனைவியை குஷியாக வைத்துக்கொள்ள அவர் அடிக்கும் லூட்டியால் பல கணவர்கள் வீட்டில் கொட்டுமழை வாங்கி வருகின்றனர்.

திருமணமானதில் இருந்து தனது மனைவியுடன் ரீல்ஸ் போடுவதில் பிசியாக இருக்கும் பிரேம்ஜி, அடுத்த வீடியோவாக தனது மனைவியை குஷிப்படுத்த "தோசை சுட்டு" தனது மனைவிக்கு கொடுக்கிறார். தோசை கல்லையே திருப்பி, திருப்பி அலப்பறை செய்யும் பிரேம்ஜி-யின் அட்டகாசத்தை பார்த்து அவரது மனைவி இந்து விழுந்து விழுந்து சிரிந்துள்ளார்.

இதனை பார்த்து பல மனைவிகள் சந்தோஷப்பட்டு, தங்கள் கணவர்களையும் தோசை ஊற்ற வைப்பதாக நகைச்சுவை கலந்த உரையாடல்கள் காற்றில் பரவி வருகிறது.
இதையும் படிங்க: தயாராகிறது த்ரிஷ்யம் மூன்றாம் பாகம்..! உறுதி செய்த மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால்...!