தமிழ் முன்னணி நடிகர்கள் வரிசையில் தற்போது வலம் வருபவர்தான் நடிகர் யோகிபாபு, இவரது கால்ஷீட்டை பிடிக்க பல இயக்குனர்கள் தேடி வரும் நிலையில், எப்பொழுதும் ஷூட்டிங்கில் பிசியாக இருப்பவர். அதுமட்டும் இல்லாது ஷூட்டிங் நடைபெறும் பகுதிகளுக்கு அடிக்கடி பயணம் செய்வதோடு, ஆன்மிக பயணங்களையும் மேற்கொள்வார் என்பது அனைவருக்கும் தெரியும்.

இந்த நிலையில், இன்று அதிகாலை சென்னையில் இருந்து பெங்களூருக்கு சொந்த வேலைக்காக காரில் புறப்பட்ட யோகி பாபு ராணிப்பேட்டை பகுதி வழியாக சென்று கொண்டிருந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அருகே இருந்த சாலைத்தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.
இதையும் படிங்க: வாழ்நாளில் இனி அரசியல் பக்கம் தலை வைக்கமாட்டேன்... தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி உறுதிப்பட முடிவு.!

இதில் எந்தவித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நடிகர் யோகிபாபு, பின்னர் வேறு காரை வரவழைத்து அங்கிருந்து பெங்களூருவுக்கு புறப்பட்டு சென்றார்.

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சாலையின் நடுவே சிக்கியிருந்த காரை அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. .
இதனை தொடர்ந்து, தனது x தளத்தில் "நான் சாலை விபத்தில் சிக்கவில்லை நலமுடன் இருக்கிறேன்" என்று யோகி பாபு பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: "வயதானாலும், நடிகைகளும் திறமைசாலிகள்தான்" 53 வயதான மனிஷா கொய்ராலாவின் ஆதங்கம்