எடப்பாடி பழனிச்சாமியைத் தொடர்ந்து எஸ்பி வேலுமணியும் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை டெல்லி விரைந்திருக்கிறார். அங்கு இருக்கக்கூடிய டெல்லியில் கட்டப்பட்டிருக்கக்கூடிய அதிமுகவின் தலைமை அலுவலகத்தை அவர் பார்வையிட இருப்பதாக தகவல் வெளியாகி இருந்த போதிலும் அவர் பாஜகவுடனான கூட்டணியை இறுதி செய்வதற்காகவே சென்று இருக்கிறார் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த கருத்துக்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படும் அதேசமயத்தில், இன்று மாலை அமித்ஷா அவர்களை சந்திப்பதற்காகவும் அதே மாதிரி பாஜக மூத்த தலைவர்களை சந்திப்பதற்காகவும் நேரம் கேட்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனைத் தொடர்ந்தே, அதிமுக பாஜக கூட்டணி இறுதி செய்யப்படும் என்ற தகவல் எல்லாம் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING தமிழக அரசியலில் பரபரப்பு... திடீரென டெல்லி பறந்த இபிஎஸ்... பின்னணி என்ன?

இந்த நிலையில் தான் அதிமுகவினுடைய தலைமை நிலைய செயலாளராக இருக்கக்கூடிய முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியும், எடப்பாடி பழனிச்சாமியை தொடர்ந்து இன்று மதியம் மூன்று மணி அளவில் டெல்லி பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. டெல்லியில் இருவரும் பாஜக மூத்த தலைவர்களை சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே அதிமுக பாஜக கூட்டணிக்கான அந்த சமிக்கைகள் எல்லாம் தென்படத் தொடங்கி இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுகள் அடிபட்டு வந்ந்தன. அதன் அடிப்படையில் பார்க்கும் பொழுது இந்த நாளில் எடப்பாடி, எஸ்.பி.வேலுமணி பாஜக மூத்த தலைவர்களை சந்திப்பார்கள் என்றும், இன்றைய தினமே பாஜகவுடனான கூட்டணியை எடப்பாடி பழனிசாமி இறுதி செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதிமுக தலைமை அலுவலகத்தை பார்வையிட ஏற்கனவே 70 நபர்களை முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் அழைத்துச் சென்றிருக்கிறார். அவர் அங்கே முகாமிட்டு இருக்கிறார். அவரை சந்திப்பதற்கான வாய்ப்புகளும் அந்த 70 நிர்வாகிகளை சந்தித்து பேசுவதற்கான வாய்ப்புகளும் அடுத்தடுத்த நிகழ்வுகளாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இரட்டை இலை தொடர்பான தேர்தல் ஆணயத்தினுடைய வழக்கும்நிலுவையில் இருக்கிறது. இது தொடர்பாகவும் எடப்பாடி பழனிசாமி முக்கிய நபர்களை அவர் சந்திக்கக் கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: நீதிபதி வீட்டில் பணம் சிக்கிய விவகாரம்.. வங்கி கடன் மோசடியிலும் சிபிஐ வழக்குப்பதிவில் நீதிபதி பெயர்..!