பாப்கார்னுக்கு 3 வகையான ஜிஎஸ்டி வரியை கடந்த டிசம்பர் மாதம் நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதற்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்த காங்கிரஸ் கட்சி ஜிஎஸ்டி வரி முறையை வரி செலுத்துவதை எளிமைப்படுத்தக் கொண்டுவரப்பட்டது. ஆனால், ஒட்டுமொத்த குழப்பமாக மாறிவிட்டது. மோடி அரசு முழுமையாக திருத்தப்பட்ட ஜிஎஸ்டி 2.0 அறிமுகம் செய்ய துணிவிருக்கா என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியது.

ஜிஎஸ்டி வரி எதிர்காலத்தில் குறையும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்த நிலையில் அதற்கு பதில் அளித்த காங்கிரஸ் கட்சி, அந்த அறிவிப்பில் கூறியபடி ஜிஎஸ்டி குறைப்பு என்பது, சிறிதளவே குறைக்கப்படும் என்றது. மக்களவைத் தேர்தலில் நாங்கள் கூறியபடி முற்றிலும் திருத்தப்பட்ட ஜிஎஸ்டி 2.0 வரியை மத்திய அரசு கொண்டு வருமா என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்திருந்தது.
இதையும் படிங்க: ரூ.1,100 கோடி வரி செலுத்த மின்சார வாரியத்திற்கு நோட்டீஸ்.. ஜிஎஸ்டி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நிறுத்தம்..!

இந்நிலையில் சிங்கப்பூரைச் சேர்ந்த மேட் ஓவர் டோனட் நிறுவனம் ரூ.100 கோடிக்கு ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும் என்று ஜிஎஸ்டி அலுவலகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பதை காங்கிரஸ் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. டோனட்களுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி செலுத்தியுள்ளது சிங்கப்பூர் நிறுவனம். ஆனால், டோனட் என்பது பேக்கரி உணவுகளோடு சேர்ந்தது, அதற்கு 18 சதவீதம் வரி விதிப்புக்குள் வந்துவிடும் எனக் கூறி ரூ.100 கோடி ஜிஎஸ்டி வரி கோரியுள்ளது மத்திய அரசு. இப்படி ஜிஎஸ்டி வரி என்று ஜிஎஸ்டி குழப்பமான நிலையில் இருக்கிறது என காங்கிரஸ் சாடியுள்ளது.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்தில் “பாப்கார்னுக்கு ஜிஎஸ்டி வரி விதித்தபின், இப்போது டோனட்கள் பக்கம் திரும்பிய மத்திய அரசு அதற்கு வரி அலர்ஜியை ஏற்படுத்தியுள்ளது. சிங்கப்பூரைச் சேர்ந்த மேட் ஓவர் டோனட் நிறுவனம் தனது டோனட்களுக்கு 5 சதவீதம் வரி செலுத்தியுள்ளது.

ஆனால், டோனட் போன்ற பேக்கரி உணவுகளுக்கு 18% வரி செலுத்த வேண்டும். ஆனால், அந்த நிறுவனம் தவறாகக் காண்பித்து 5 சதவீதம் வரி செலுத்தி ரூ.100 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக ஜிஎஸ்டி அமைப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தற்போது மும்பை உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. அதனால்தான் ஜிஎஸ்டி 2.0 அவசரம் என்று கூறுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சிபிஐ(எம்)-ல் இணைகிறார் சசிதரூர்..? உண்மையை உடைத்த பிரகாஷ் காரத்..!