என்னை சிறையில் தள்ளினாலும் ஓய்வெடுத்துக் கொண்டு நன்றாக படிக்க முடியும். சிறைக்கெல்லாம் பயப்பட்டால் இந்த இடத்திற்கு வர முடியாது என்று நாதகவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
சென்னை நீலாங்கரை இல்லத்தில் இன்று அவர் அளித்த பேட்டி:
”ஈரோட்டில் இருந்து வழக்குக்காக காவல்துறை வந்துள்ளது. எல்லா இடங்களிலும் வழக்குப்போட்டு, அலைய வைத்து மனச்சோர்வை உண்டாக்க வேண்டும் என அரசு நினைக்கிறது. எத்தனை வழக்குகள் வேண்டுமானலும் போடுங்கள், நாங்கள் எதிர்கொள்வோம், என்னால்தான் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதனால் தான் இப்படி செய்கிறார்கள்.

கட்சியிலிருந்து சிலர் விலகுவது பற்றிக் கேட்கிறீர்கள். அவரவர்களுக்கு ஓர் எதிர்பார்ப்பு இருக்கும். அது கிடைக்கவில்லை என்பதால் போகிறார்கள். வளரக்கூடிய கட்சி இதையெல்லாம் பொருட்படுத்தி கொண்டிருக்கக் கூடாது.
இதையும் படிங்க: தேசிய கல்விக் கொள்கையில் திமுகவின் பச்சை நாடகம்… புட்டுப்புட்டு வைத்த சீமான்..!
பெரியாரை இகழ்ந்து பேசி விட்டேன் என கூறுகிறார்கள். பெரியார் பேசியதை நான் கூறினேன். பெரியாரை கொண்டாட நினைப்பவர்கள் அவரை புகழ்ந்து பேச வேண்டியதுதானே, பெரியார் பேசியதை தான் நான் பேசினேன். ஒன்று அதை மறுக்க வேண்டும், இல்லை என்றால் ஏன் அப்படி பேசினார் என விளக்கம் அளிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு அவதூறாய் பேசக்கூடாது.

புதிய கல்வி கொள்கை எதிர்ப்பது என்பது ஏமாற்று வேலை, இல்லம் தேடி கல்வி புதிய கல்வி கொள்கையில் உள்ளது. எல்லாவற்றையும் செயல்படுத்த இந்தியை எதிர்க்கிறேன் என கூறிவிட்டு, இந்தியில் சுவரொட்டி ஓட்டுகிறார்கள், இந்தியில் பேசி வாக்கு சேகரிக்கிறார்கள்.
மக்களை எவ்வளவு காலத்திற்கு ஏமாற்றி அரசியல் செய்ய முடியும். என்னை சிறையில் போட்டால் நன்றாக படிக்க முடியும். இதற்கெல்லாம் பயப்பட்டால் இந்த இடத்திற்கு வர முடியுமா”. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அதெல்லாம் முடியவே முடியாது... விஜயலட்சுமி விவகாரத்தில் வசமாக சிக்கிய சீமான்... ஐகோர்ட் அதிரடி உத்தரவு...!