சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் ஆர்யன் வில்லனாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயம் படத்தில் வெளிவந்த அமரன் படம் பிரமாண்ட வெற்றியை பெற்றது. அதில் முகுந்தன் என்ற மறைந்த ராணுவ வீரராக நடித்து அசத்தினார். உணர்வுப்பூர்வமான நடிப்பினால் அமரனின் சிவகார்த்திகேயனை அனைவரும் கொண்டாடினர். அமரனின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் மதராஸி மற்றும் பராசக்தி படங்களில் நடித்து வருகிறார்.

பராசக்தி படத்துக்கான படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த இரு படத்துக்கான அப்டேட் குறித்து ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்த நிலையில், சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் யாரெல்லாம் நடிக்க போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. விஜய் நடிப்பில் வெளிவந்த கோட் படத்தில் சிறப்பு தோற்றத்தில் சிவகார்த்திகேயன் நடித்ததால் அவர் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிப்பார் என கூறப்பட்டது.
இதையும் படிங்க: இந்தியாவை தொடர்ந்து அமெரிக்காவில் அடியெடுத்து வைக்கும் "அமரன்".. உலக ஃபேமஸ் ஆக மாறும் சிவகார்த்திகேயன்..!
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்க உள்ளது உறுதியாகியுள்ளது. அதாவது மலையாள இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்குவதாக கூறப்படுகிறது. இதில் வில்லன் கேரக்டரில் ஆர்யா நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. இதேபோல் பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ரவிமோகன் வில்லனாக நடித்து வருகிறார். ரவி மோகன், ஆர்யா போன்ற மாஸ் ஹீரோக்கள் வில்லனாக மாறி நடித்து வருவது ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

இந்த புதிய படத்துக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என கூறப்படுகிறது. சுதா கொங்கரா இயக்கும் பராசக்தி படத்தில் இந்தி திணிப்பு எதிர்ப்பு போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளதற்கான சிறப்பு கிளிம்ப்ஸ் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் படப்பிடிப்பு குழு இலங்கையில் இருப்பதாகவும் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: தோல்வியை பாராத இயக்குநரின் அடுத்த படம் சிவகாத்திகேயனுடன்.. விஜயை வைத்து மாஸானவர் தற்போது skவை வைத்து என்ன ஆக போகிறாரோ..!