காரைக்குடியில் ஹெச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்," தமிழக பட்ஜெட்டில் ரூ.40 ஆயிரம் கோடிக்கு வருவாய் பற்றாக்குறை உள்ளது. ஏற்கனவே பற்றாக்குறை உள்ள நிலையில், ரூ.1.62 லட்சம் கோடி கடன் வாங்குகிறீர்கள். மீதி ரூ.1.22 லட்சம் கோடி கடன் எதற்காக வாங்குகிறீர்கள். ரூ.75 ஆயிரம் கோடி வரை வட்டி கட்டும் அளவுக்கு கடன் வாங்கியது ஸ்டாலின் அரசுதான். உண்மையில் தமிழக பட்ஜெட் பொருளாதார ரீதியாக தமிழகத்துக்கு ஒரு மரண சாஸ்திரம்.

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கேடு என்பது உச்சத்துக்கு சென்றுவிட்டது. இதை எல்லோரும் சொல்லிக்கொண்டுதான் வருகிறார்கள். முன்னாள் முதல்வர் கருணாநிதிக்குப் பாதுகாலராக இருந்த காவல் அதிகாரியையே கொலை செய்துள்ளனர். காரைக்குடியில் பட்டப்பகலில் இளைஞரை கொலை செய்திருக்கிறார்கள். திமுக ஆட்சியில் நெல்லை மாவட்டத்தில் மட்டும் இரு நூறுக்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன. இதற்காக முதல்வர் பதவியை மு.க. ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்.

திமுக அரசு பாஜகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் மட்டும்தான் கவனம் செலுத்துகிறது. இப்படி இருந்தால், சட்ட விரோதமாக செயல்படுவோரை எப்படி காவல் துறையால் கட்டுப்படுத்த முடியும்? சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை சரி செய்யாமல் அரசியல் பழிவாங்கும் செயலில்தான் தமிழக அரசு ஈடுபடுகிறது" என்று ஹெச். ராஜா தெரிவித்தார்.
இதையும் படிங்க: அதை நாங்கதான் செய்யணும்.. நீங்க ஏன் போராடுறீங்க அண்ணாமலை..? சீமான் சுளீர் கேள்வி.!
இதையும் படிங்க: பாஜகவின் அடியாள்தான் அமலாக்கத்துறை.. முதுகெலும்பில்லாத கோழை என விளாசிய ரகுபதி..!