கோவை மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்தார்.
பல்வேறு நிகழ்ச்களில் கலந்து கொள்ள நேற்று இரவு கோவை வந்த அமித்ஷா நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கினார். மத்திய அமைச்சர் அமித்ஷா வருகையை முன்னிட்டு, கோவை மாநகரில் மட்டும் சுமார் 3,000 போலீசார், மற்றும் புறநகரில் 4,000 போலீசார் என மொத்தம் 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது பீளமேடு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாஜக மாவட்ட தலைமை அலுவலகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து காணொலி காட்சி மூலம் திருவண்ணாமலை, ராமநாதபுரம் மாவட்ட அலுவலகங்களை திறந்து வைக்கிறார்.
மாலை ஈசா யோகாவில் நடைபெறும் மகா சிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
இதையும் படிங்க: தொகுதி மறுசீரமைப்பு சர்ச்சையை கிளப்பும் திமுக.. எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்... முதல்வர் ஸ்டாலின் மீது அண்ணாமலை சரமாரி அட்டாக்.!
இதற்கிடையே, கோவையில் உள்ள பின்னர் தனியார் ஓட்டலில் நடைபெறும் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார். இந்த ஓட்டலில் தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் யார் என்பது தொடர்பாக அமித் ஷா ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

பாஜகவின் அடுத்த மாநிலத் தலைவர் யார்? என்ற கேள்வி எழுந்ததில் இருந்தே அண்ணாமலை தான் மீண்டும் வருவார் என்றும், அவர் மீது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அபரிவிதமான நம்பிக்கை வைத்திருக்கிறார் என்றும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர். அதனை மெய்ப்பிக்கும் வகையில் சமீபத்தில் முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு இல்ல திருமண விழாவில் பங்கேற்ற உள்துறை அமைச்சர் அமித் ஷா, அண்ணாமலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்.

தற்போது கோவை வந்துள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்றிரவு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் சால்வை அணிவித்தும், மலர் கொத்து கொடுத்தும் வரவேற்றுள்ளனர். அதனை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அமித் ஷா, முதல் புகைப்படமாக அண்ணாமலை வரவேற்பதை தான் பகிர்ந்துள்ளார். இதனை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வரும் அண்ணாமலை ஆதரவாளர்கள், தன்னை வரவேற்வர்கள் போட்டோவில் கூட அமித் ஷா அண்ணாமலைக்குத் தான் முதலிடம் கொடுத்துள்ளார். அப்படின்னா அமித் ஷாவிடம் அண்ணாமலைக்கு எவ்வளவு செல்வாக்கு இருக்கு பாருங்க என துள்ளாட்டம் போட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: வெடிக்கும் அடுத்த சர்ச்சை.. ஏன் இந்தக் கற்பனை பயம், குழப்பம்..? முதல்வர் ஸ்டாலினை வறுத்தெடுக்கும் அண்ணாமலை.!