தஞ்சாவூர் மாவட்டம் சின்னக்கோட்டைகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் எஸ்.ஜெகதீஸ்வரன். 24 வயதான ஜெகதீஸ்வரன் சென்னையில் தங்கி வேலைபார்த்து வந்துள்ளான் அப்போது அதேபகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியுடன் நட்பாக பேசி பழகி உள்ளான் நாளடையில் இது காதலாக மலர்ந்தது. இது சிறுமியின் பெற்றோருக்கு தெரியவரவே இருவரையும் கண்டித்துள்ளனர். சிறிது நாளில் ஜெகதீஸ்வரன் தஞ்சாவூருக்கே சென்றுவிட்டான். சிறுமி அதன்பின்னரும் செல்போன் மூலம் ஜெகதீஸ்வரனுடன் பேசிக்கொண்டுருந்தார். இந்நிலையில் சிறுமியை தஞ்சாவூருக்கு வரும்படி அழைத்த ஜெகதீஸ்வரன், வீட்டில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க செல்போன் எண்ணையும் மாற்றிவிடும்படி ஐடியா கொடுத்துள்ளான். ஜெகதீஸ்வரனின் பேச்சை அப்படியே நம்பிய சிறுமியும், வீட்டில் இருந்த பணத்தை எல்லாம் எடுத்துக்கொண்டு, பள்ளி செல்வது போல கிளம்பி தஞ்சாவூர் சென்றுள்ளார்.

தஞ்சாவூர் பஸ் ஸ்டாண்டில் இறங்கிய சிறுமி ஜெகதீஸ்வரனை பலமுறை போனில் தொடர்பு கொண்ட போதும், ஜெகதீஸ்வரன் போனை எடுக்கவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சிறுமி என்ன செய்வது என்று அறியாமல் பஸ் ஸ்டாண்டிலேயே கண்ணீரும் நின்றுள்ளார். இதை கவனித்த தஞ்சாவூர் அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்த புவனேஸ்வரன், உன்னை காதலனோடு சேர்த்து வைக்கிறேன் எனக்கூறி சமாதானம் செய்துள்ளார். இரவு நேரமாகிவிட்டதால் என் வீட்டில் தங்கிக் கொள்ளலாம். என் மனைவி உன்னை பார்த்துக்கொள்வாள் என நயவஞ்சகமாக பேசி சிறுமியை வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளான்.
இதையும் படிங்க: 25-என பொய் சொன்ன 38! 17 வயது கல்லூரி மாணவிக்கு காதல் வலை.. போக்சோவில் தட்டிதூக்கிய போலீஸ்..


வீட்டிற்கு சென்றதும் தனது மனைவி ஊருக்கு சென்றுவிட்டதாக கூறிய புவனேஸ்வரன், சிறுமியை வீட்டில் அடைத்து வைத்து 3 நாட்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். மனைவி வீட்டுக்கு வரும் நாளில் சிறுமியை மீண்டும் சென்னைக்கே பஸ் ஏற்றி விட முடிவு செய்த புவனேஸ்வரன் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்துக்கு அழைத்துள்ளான்.

இதனிடையே சிறுமியை காணவில்லை என புகாரளித்த பெற்றோர், காதல் விவகாரத்தை கூறி தஞ்சாவூர் சென்று இருக்கலாம் என போலீசாரிடம் தெரிவித்திருந்தனர். அதனடிப்படையில் சிறுமியின் போட்டோவோடு பஸ் ஸ்டாண்டில் தேடுதல் நடத்திய போலீசார், புவனேஸ்வரனோடு அழுதபடியே நின்றுகொண்டிருந்த சிறுமியை கண்டுபிடித்தனர். பின்னர் போலீஸ் நடத்திய விசாரணையில் சிறுமிக்கு நடந்த கொடுமை வெளிச்சத்திற்கு வந்தது. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த புவனேஸ்வரனையும், காதலிப்பதாக கூறி ஏமாற்றிய ஜெகதீஸ்வரனையும் போக்சோவில் கைது செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: இதை குழந்தைங்க சாப்பிட்டா என்ன ஆகுறது? வறுத்த மீனில் நெளிந்த புழுக்கள்.. அலட்சியமாக பேசிய கடைக்காரர்..!