தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் வரலாற்றில், மக்களை கவரும் வகையில் புதுவிதமான தோற்றத்தில் "சமையல் நிகழ்ச்சியை" உருவாக்கியது ஓர் தனியார் தொலைக்காட்சி நிறுவனம். பல நிகழ்ச்சிகளை மக்களுக்கு கொடுத்து வெற்றி கண்ட தொலைக்காட்சி நிறுவனம் மக்களுக்கு புதிய நிகழ்ச்சியை கொடுக்க முடிவு செய்த பொழுது என்ன செய்வது என தெரியாமல் முழித்தனர்.பின் காமெடியில் கலக்கும் கோமாளிகளை வைத்தே நிகழ்ச்சி பண்ணலாம் என முடிவு செய்து குக்குகளையும் கோமாளிகளையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட பிரமாண்டமான நிகழ்ச்சிதான் "குக் வித் கோமாளி".

இந்த நிகழ்ச்சி தற்பொழுது பல சீசன்களை கடந்தாலும், அந்த நிகழ்ச்சியில் வரும் குக்குகளை விட கோமாளிகளுக்கே மவுசு அதிகம். அந்த வகையில், மக்களுக்கு மிகவும் பிடித்தவர்கள் என்றால் கேமாளிகளில் புகழ், பாலா, சரத், ராமர், தங்கராஜ் என பலர் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் சமையல் கலைஞர்களிடம் அடிவாங்கி, திட்டுவாங்கி, பின் தங்களது முழு உழைப்பையும் போட்டு அவர்களை ஜெயிக்க வைக்க போராடுவர்.
இதையும் படிங்க: விஜய் டீவி பிரபலம் ஆபிஸ் ஓபன் பண்ணிட்டாரா..! என்னவா இருக்கும்... குழப்பத்தில் ரசிகர்கள்..!

இவர்களை போல தொகுப்பாளரில் ரக்ஷனும், நடுவர்களில் வெங்கடேஷ் பர்ட், தாமோ, மற்றும் புதியதாக இணைந்த மாதம்பட்டி ரங்கராஜ் ஆகியோரும் இணைந்து நிகழ்ச்சியை பலகோடி மக்களின் இல்லங்களுக்குள் கொண்டு சேர்த்தனர். இப்படி நல்ல படியாக சென்று கொண்டிருந்த "குக் வித் கோமாளி" நிகழ்ச்சியில் பூகம்பமாய் போட்டியாளராக தொகுப்பாளர் பிரியங்கா வந்தார். பின், அங்குள்ள அனைவரையும் வேலை செய்ய விடாமல் தடுத்தார் என கூறி ரக்ஷனுடன் தொகுத்து வழங்கிய மணிமேகலை பகிரங்க குற்றச்சாட்டை கூறி குக் வித் கோமாளியில் இருந்து விலகி சென்றார்.

இப்படி இத்தனை கலவரமுள்ள "குக் வித் கோமாளி" செட்டுக்குள் கோமாளியாக என்ட்ரி கொடுத்தவர் தான் 'நடிகை கேமி'. பார்க்க உயரமாகவும், தலைமுடி சுருளாகவும் வைத்து இருக்கும் இவர் பிரபல வானொலி நிலையத்தில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கி பின் "குக்வித்கோமாளி" நிகழ்ச்சியில் நுழைந்து மக்களின் மனதை தனது காமெடி திறமையால் வென்றவர்.

இப்படி ஆர்.ஜேவாக இருந்து, கோமாளியாக அவதாரம் எடுத்து, தற்பொழுது நடிகையாக மாறி இருக்கிறார். குக் வித் கோமாளிக்கு பின் சிறிது நாட்களாக காணாமல் போன கேமி, திடீரென 'ஆபிஸ்' என்ற இணையத் தொடரில் நடித்து வருவதாக கூறினார். இப்படி பல அவதாரங்களை எடுத்திருக்கும் கேமி அடுத்ததாக நடன அவதாரம் எடுத்து இருக்கிறார். பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரமாண்ட நடன நிகழ்ச்சியான "டான்ஸ் ஜோடி டான்ஸ்" நிகழ்ச்சியில் கேமி, அருண் என்பவருடன் இணைந்து போட்டியாளராகப் பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது வரலட்சுமி சரத்குமார் நடுவராக வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை பார்த்த நெட்டிசன்கள் 'நீ கலக்கு கேமி இது நம்ப காலம்' கண்டிப்பாக நீங்க ஜெயிப்பீங்க "வெற்றி நமதே" என பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 2வது திருமணம் குறித்து விளக்கம்.. இது தான் விஷயமா.. டபுள் ட்ரீட் கொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ்..!