2024 ஆம் ஆண்டு முடிந்து 2025ல் அடியெடுத்து வைத்திருக்கும் நமக்கு, ஆரம்பத்திலிருந்து பரிசு மழை பொழிவது போல், ஜனவரி, பிப்ரவரி, மார்ச் என இந்த மூன்று மாதங்களில் ரீரிலீஸ் படங்கள் வெளியானது. அதுமட்டுமல்லாமல் இதுவரை கிட்டத்தட்ட 45 படங்களுக்கும் மேலாக வெளியாகியுள்ளது. உதாரணமாக, டிராகன், குடும்பஸ்தன், சூழல், சப்தம், கிங்ஸ்டன், விடாமுயற்சி, பராரி, ஃப்ளட் அண்ட் பிளாக், சங்கராந்திகி வஸ்துனம், மதகஜராஜா, தனுஷின் நீக் என பல படங்கள் வெளியாகியுள்ளது. இதில் சில படங்கள் வெற்றிகரமாக பேசப்பட்டாலும், பல படங்கள் தோல்வியில் முடிந்துள்ளது.

இந்த நிலையில் இந்த வருடம் வெளியான திரைப்படங்களில் மிகவும் ஹிட் படமாக பார்க்கப்படுவது நான்கு படங்கள் தான். முதலாவதாக, 13 வருடங்களுக்கு முன் ஜெமினி பிலிம் சர்கியூட் தயாரிப்பில், இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில், விஜய் ஆண்டனி இசையில், விஷால், அஞ்சலி, சந்தானம், வரலட்சுமி சரத்குமார், சோனு, மணிவண்ணன், சுப்பாராஜூ, நிதின் சத்யா, சடகோபன் ரமேஷ், ஜான் கோக்கென், இராசேந்திரன், மனோபாலா, மயில்சாமி, சுவாமிநாதன், சிட்டி பாபு, சீனு மோகன், விச்சு விசுவநாத், லொள்ளு சபா மனோகர், கே.எஸ்.ஜெயலட்சுமி, முத்துக்காளை, சத்ய கிருஷ்ணன், காயத்ரி இராவ், உசா எலிசபெத், லொள்ளு சபா ஈஸ்டர், ஆர்யா, சதா ஆகியோர் நடிப்பில் வெளியான மதகஜராஜா திரைப்படம்.இத்திரைப்படம் நீண்ட வருடங்களுக்கு பின் வந்தாலும் அப்பொழுது சந்தானத்தின் காமெடிகளை இன்று பார்க்க வைத்து இப்படம் ஹிட் ஆனது.
இதையும் படிங்க: சேலம் மக்களுக்கு ஓர் நற்செய்தி..சேலம் மண்ணில் கால் பதிக்கும் நடிகை கயாடு லோஹர்...!

இதனை தொடர்ந்து இரண்டாவதாக, குடும்பஸ்தன். ராஜேஷ்வர் காளிசுவாமி இயக்கத்தில் மணிகண்டன், குரு சோமசுந்தரம், பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஜனவரி 24 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசான 'குடும்பஸ்தன்' திரைப்படம் வசூலை வாரி குவித்து வெற்றி படமாக மாறியது. இந்நிலையில் இப்படம் ஓடிடி தளமான ஜீ5ல் ரிலீஸாகி இல்லங்களை கொண்டாட வைத்துள்ளது. தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்வது என ஒருபுறமும், வருமானம், வேலை என மறுபுறமும் குடும்பத்தில் உள்ள இளசுகள் எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என்பதை நகைச்சுவையாக உணர்த்தி வெற்றியான திரைப்படம் தான் குடும்பஸ்தன்.

மூன்றாவதாக, விடாமுயற்சி, இப்படம் வசூல் ரீதியாக இல்லை என்றாலும், ரசிகர்களின் மனதில் நிலைகொண்ட படமாக இன்றும் இருந்து வருகிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில் ஏகே, திரிஷா, அர்ஜுன், பிக்பாஸ் ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்டோர் பலர் நடிப்பில் வெளியான அஜித்தின் 'விடாமுயற்சி' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி சக்கபோடு போட்டது. தியேட்டரை தொடர்ந்து தற்பொழுது இப்படத்தை நெட்பிளிக்ஸ் தளத்தில் மக்கள் பார்த்து வருகின்றனர்.

நான்காவதாக, வந்த அனைத்து படங்களையும் விட வசூலை வாரி குவித்து கொண்டு இருக்கும் பிரமாண்டமான ஹிட் படமாக பார்க்கப்படுவது டிராகன். AGS என்டேர்டைன்மெண்ட், கலப்பாத்திஸ் அகோரம் தயாரிப்பில் அஷ்வின் மாரிமுத்து இயக்கத்தில் விஜே சித்து, ஹர்ஷத்கான், பிரதீப் ரங்கநாதன் ஆகியோர் இணைப்பில் உருவான டிராகன் திரைப்படம் பல குடும்பங்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. தற்பொழுது இந்த படம் 20நாட்களுக்கும் மேலாக திரையரங்கில் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் வருகின்ற மார்ச் 21ம் தேதி இப்படம் ஓடிடியில் வெளியாகும் என படக்குழுவினர் கூறியுள்ளனர்.இதனை பார்த்த ரசிகர்கள் டிராகன் ஓடிடியில் ரிலீஸ் ஆவதற்காக காத்துகொண்டு இருக்கின்றனர்.

இந்த நிலையில், வண்டர்பார் ஸ்டுடியோஸ் மற்றும் ஆர்.கே. புரொடக்ஷன்ஸின் தயாரிப்பில் தனுஷ் இயக்கத்தில் ரெட் ஜெயிட் மூவிஸால் உருவாக்கிய "நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்" என்ற திரைப்படமும் ட்ராகனும் ஒரே நேரத்தில் வெளியானாலும் டிராகன் படம் ஹிட் கொடுத்துள்ளது.
இதையும் படிங்க: கண்ட கனவு நினைவானது... தற்பொழுது ஓடிடியில் டிராகன்..! குஷியில் இளசுகள்..!