"அட எது பெருசுன்னு அடிச்சி காமிங்க" என வடிவேலு சொல்வதை போல் தற்பொழுது தயாரிப்பாளர்கள் ஓடிடி பெருசா...? இல்ல தியேட்டர் பெருசா...? என இரு தரப்பையும் சண்டை பிடிக்க வைத்துள்ளனர். நாம் அனைவரும் அறிந்த, சூர்யாவின் நடிப்பில் உருவான "ஜெய் பீம்" திரைப்படம் "ஓடிடி தலமான அமேசான் பிரைமில்" நேரடியாக வெளியாக இருக்கிறது என்று சொன்னவுடன் முதல் எதிர்ப்பு தியேட்டர் உரிமையாளர்களிடம் இருந்து வந்தது.
பல எதிர்ப்புகளையும் மீறி நடிகர் சூர்யா கண்டிப்பாக "ஜெய் பீம்" ஓடிடியில் தான் வெளியாகும் என்று கண்டீஷனாக கூறியிருந்தார். அவர் கூறியதை போல் அப்படம் ஓடிடியில் வெளியாகி பலரது பாராட்டையும் பெற்றது. ஓடிடியில் படம் வெளியிட்டதில் நம்பர் ஒன்றாக சூர்யா பூஜை போட்டு ஆரம்பிக்க, அவருக்கு பின்பாக தற்பொழுது வரிசையாக சீரிஸ்களாக நிறைய தொடர்கள் ஓடிடியில் வெளியாகி ஹிட் கொடுத்து வருகிறது.
ஆனாலும் இதுவரை தியேட்டரில் வெளியிடாமல் நேரடியாக ஓடிடியில் படத்தை ரிலீஸ் செய்தவர் நடிகர் சூர்யாதான் என்ற பெயரை மாற்றி இரண்டாவது இடத்தை பிடிக்க வந்திருக்கிறார் நடிகை நயன்தாரா.

தற்பொழுது சினிமா உலகில் சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவராக இருக்கும் நயன்தாரா தொடும் இடம் எல்லாம் கன்னி வெடி வைப்பது போல் சிக்கி கொண்டு இருக்கிறார் எனலாம். இப்படி இருக்க ஒருபுறம் "லேடி சூப்பர் ஸ்டார்" பிரச்சனையும் மறுபுறம் "திருமண ஆவணப்பட" பிரச்சனை என பல பிரச்சனைகளுடன் சுற்றி வருகிறார்.
தன் மீதுள்ள திருஷ்டியை கழிக்க "மூக்குத்தி அம்மன் 2"ல் நடிக்க இருக்கிறார். அதற்கான பூஜை சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. அதன் பின் பல படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் நயன்தாராவை சம்பளத்தில் பின்னுக்கு தள்ளி முதலில் இருக்கிறார் நடிகை சாய்பல்லவி.
இதையும் படிங்க: ஷுட்டிங் ஸ்பார்ட்டில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட நயன்தாரா... இயக்குநரையே கடுப்பாக்கிய நயனின் செயல்..!

இந்த சூழலில், தமிழகம் மட்டுமல்லாது பேன் இந்தியா ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா, தற்பொழுது 'டெஸ்ட்" என்ற திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். YNOT studio's தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான 'சசிகாந்த்' இயக்கத்தில், மாதவன், நயன்தாரா, சித்தார்த், முதலானோரின் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் டெஸ்ட் இப்படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் என படக்குழுவினரால் கூறப்பட்டுள்ளது.

இப்படி இருக்க, ஜெய் பீம் படத்தைப் போன்று இப்படமும் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகாமல் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்படுவதாக netflix நிறுவனத்தின் சார்பாக அதிகாரப்பூர்வமான அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டு இருந்தது. அதன்படி ஏப்ரல் 4காம் தேதி 'டெஸ்ட்' திரைப்படம், தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகும் என அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்நிலையில் படத்தின் கதாப்பாத்திர அறிமுக வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். அதன்படி இப்படத்தில் சித்தார்த் ஒரு கிரிக்கெட் வீரராகவும், நயன் தாரா , மாதவனின் மனைவியாக குமுதா என்ற பெயரில் அறிமுகமாகி இருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து இதன் வீடியோக்களை பார்த்த தியேட்டர் உரிமையாளர்கள். மீண்டும் கோபத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க: நயன்தாராவின் நிம்மதியை கேஸ் போட்டு கெடுத்த தனுஷ்.. இவர்கள் ஈகோ சண்டையில் பாவமாக சிக்கிய நெட்பிளிக்ஸ்..!