நடிகர் ரஜினிகாந்தின் சூப்பர் ஸ்டார் பட்டம், நடிகர் விஜய்க்கு உரியது என ஜெயிலர் படம் வெளியாவதற்கு முன்பு ரசிகர்களால் பரவலாக பேசப்பட்டது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் "உன் அழும்பை பார்த்தவன் உன் அப்பன் விசிலை கேட்டவன்" என பாட்டு பாடி அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்று புள்ளி வைத்தார்.

இதனை தொடர்ந்து, சன் பிச்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் லோகேஷ் இயக்கத்தில் அனிருத் ரவிச்சந்திரனின் மிரட்டும் இசையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த- தேவா என்ற கதாபாத்திரத்திலும், அக்கினேனி நாகார்ஜுனா "சைமன்" என்ற கதாபாத்திரத்திலும், உபேந்திரா-'கலீசா என்ற கதாபாத்திரத்திலும், சௌபின் சாகிர் 'தயன் என்ற கதாபாத்திரத்திலும், சத்யராஜ்"இராசசேகர' என்ற கதாபாத்திரத்திலும், சுருதி ஹாசன் "பிரீத்தி" என்ற கதாபாத்திரத்திலும், ஆமிர் கான் சிறப்புத் தோற்றத்திலும், பூஜா ஹெக்டே ஒரு பாடலில் நடன சிறப்புத் தோற்றத்திலும் நடித்து பிரமாண்டமாக உருவாகி இருக்கும் படம் தான் 'கூலி'.
இதையும் படிங்க: எம்புரான் படத்தின் ட்ரெய்லரை வெளியிட்ட ரஜினிகாந்த்.. மலையாளப் படமா? ஹாலிவுட் படமா என வியப்பு..!

இப்படம் வெளியாகும் தேதி அன்று பாலிவுட்டின் "வார் 2" திரைப்படம் வெளியாவதால் படத்தின் வெளியிட்டு தேதியை ஒத்தி வைத்து பின் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகும் எனவும் அடுத்த நாள் சுதந்திர தின விடுமுறை என்பதால் மக்கள் மகிழ்ச்சியுடன் படத்தை காணலாம் எனவும் படக்குழுவினர் தெரிவித்து இருந்தனர். இப்படி இருக்க, கூலி திரைப்படத்தை ரூ.120 கோடி பேரம் பேசி கலாநிதி மாறனிடம் இருந்து "அமேசான் ஓடிடி தளம்" கைப்பற்றி இருக்கிறது என்பதால் இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகமாகவே உள்ளது.

இதே போல், நடிகர் விஜய் தனது அடுத்த படமான லியோ-2 படத்தில் நடிப்பார் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த நிலையில், ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் இனி சினிமாவில் இருந்து விலகி முழு அரசியலில் ஈடுபட போவதாக நடிகர் விஜய் கூறி அனைவரையும் திக்கு முக்காட வைத்தார். அதனைத் தொடர்ந்து தனது கடைசி படத்தை எச்.வினோத் இயக்கத்தில் "ஜனநாயகன்" திரைப்படத்தில், பூஜா ஹெக்டே, பாபிஜியோல், மமீதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட சக நடிகர்களுடன் நடிகர் விஜய் நடித்து வருகிறார்.

சமீபத்தில், நடிகர் விஜய் நடித்து வந்த ஜனநாயகம் படத்தின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த படத்தை பெங்களூரை சேர்ந்த கேவிஎன் ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரித்து வரும் நிலையில், சமீபத்தில் இந்த நிறுவனத்தில் ஐடி ரெய்டு நடைபெற்று உள்ளது. மேலும் இதன் காரணமாக அந்த நிறுவனத்தின் கணக்குகள் முடக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் ஜனநாயகன் ஷூட்டிங்கில் பணியாற்றும் பணியாளர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக சரியான சம்பளம் மற்றும் பேட்டாக்கள் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டு தற்போது ஷூட்டிங் நிறுத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தன.

இப்படி தயாரிப்பாளர் நிறுவனத்தின் கணக்குகள் முடக்கப்பட்டு இருப்பதால், படத்தின் மீதமுள்ள ஷூட்டிங்கை முடிக்க நினைத்த நிறுவனம் பணத்திற்காகவும் படக்குழுவினருக்கு சம்பளம் கொடுப்பதற்காகவும் ஜனநாயகம் படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனத்திற்கு ரூ.80 கோடிக்கு விற்றுள்ளதாக சினிமா வட்டாரங்களில் இருந்து கூறப்படுகிறது. இந்த நிலையில், கூலி திரைப்படம் அமேசான் பிரைமிலும், ஜனநாயகம் நெட்பிளிக்ஸ் தளத்திலும் வெளியாக இருப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இப்படி இருக்க, ஜனநாயகன் திரைப்படத்தில் நடிகர் விஜயுடன் சக நடிகர்கள் மட்டுமல்ல இயக்குனர்களும் இணைந்து உள்ளனர் என்ற இனிப்பான தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதன்படி இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார், அட்லி ஆகிய மூன்று பேரும் இப்படத்தில் வரும் குறிப்பிட்ட பாடலில் "நடிகர் விஜய்க்கு சென்ட் ஆஃப் கொடுக்கும் காட்சிகளில்" நடித்து இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சுதந்திர தினத்தில் ரஜினியின் ஸ்பெஷல் தரிசனம்...! இப்பவே தயாரான ரசிகர்கள்...!