நாடு முழுவதும் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆட்சி நடைபெற்று வரும் மாநிலங்களில் ஒரே பெண் முதல்வராக டெல்லியில் ரேகா குப்தா இன்று பதவி ஏற்று கொண்டார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்த பிரம்மாண்டமான விழா நடைபெற்றது.

தலைநகர் டெல்லியில் 27 ஆண்டு கால அரசியல் வனவாசத்திற்கு பிறகு, ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பாஜக வரலாற்றுச் சிறப்புமிக்க டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள், பாஜக மூத்த தலைவர்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள், மாநில முதல்வர்கள் திரளாக பங்கேற்று புதிய முதல்வரை வாழ்த்தினார்கள்.
இதையும் படிங்க: அப்போது அப்பா… இப்போது மகன்..! டெல்லி முதல்வர் பதவியை தட்டிப்பறித்த பாஜகவின் 2 பெண்கள்..!
ரேகா குப்தா டெல்லி முதல்வராக நியமிக்கப்பட்டதன் மூலம் பெண் முதல்வர்களால் ஆளப்படும் நீண்ட பாரம்பரியம் டெல்லியில் தொடர்கிறது. இதன் மூலம் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த பெண்களுக்கு சாதகமான தகவலை கொடுக்கும் பாஜகவின் முயற்சியாக இது அரசியல் நோக்கர்களால் கருதப்படுகிறது.

ராஜஸ்தானில் வசுந்தரா ராஜ வாய்ப்பை இழந்ததிலிருந்து பஜன்லால் சர்மா அந்த மாநிலத்தின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். டெல்லி நியமனத்தின் மூலம் பாஜக முதல்வர்களில் ஒருவராக பெண் ஒருவர் பொறுப்பேற்கும் இடைவெளி குறையை நிரப்பி இருக்கிறார் குப்தா.
தற்போது முதல்வர் பதவி விலகிய ஆம் ஆத்மி கட்சி தலைவரான அதிஷி டெல்லி சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் வாய்ப்பு இருப்பதால் தற்போதைய ரேகா குப்தாவின் முதல்வர் பதவி, இரண்டு பெண்களுக்கும் இடையேயான போட்டியாக இருக்கும்.
மேலும் பாஜகவின் 13 முதல்வர்களில் ரேகா மட்டுமே பெண். ஆர் எஸ் எஸ் மற்றும் பாஜக இரண்டும் ஒரு பெண் முதல்வரை பெற வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தன. பாஜக தனது கட்சி நிறுவன பொறுப்புகளில் பெண்களுக்கு 33 சதவீதம் வழங்குவது இங்கு நினைவு கூறத்தக்கது.

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜிக்கு (மேற்கு வங்காளம்) பிறகு நாட்டின் இரண்டாவது பெண் முதலமைச்சராகவும் இவர் இருப்பார். பதவி ஏற்பு விழாவுக்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய ரேகா பெண்களுக்கு மாதந்தோறும் 2500 நிதி உதவி வழங்குவது குறித்த தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்தார். மாதாந்திர உதவியின் முதல் தவணை மார்ச் எட்டாம் தேதிக்குள் அவரவர் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று ம் அவர் கூறினார்.
ஆர்.எஸ்.எஸ் சார்ந்த அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மூலம் அரசிலும் கட்சியிலும் முக்கிய பதவிகளை வகிக்கும் பாணி வளர்ந்து வரும் பாஜக குழுவில் ரேகா குப்தாவும் இப்போது இணைந்திருக்கிறார்.
இதையும் படிங்க: டெல்லியில் 6 அமைச்சர்கள் பெயர் அறிவிப்பு; பிரம்மாண்ட விழாவில் முதல்வர் ரேகா குப்தாவுடன் பதிவியேற்பு!