ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்ற, நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட திமுக பொதுச்செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான, துரைமுருகன் உருக்கமாக பேசியது சம்பவம் அங்குள்ள மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
ராணிப்பேட்டை நிகழ்ச்சியில் பேசிய துரைமுருகன்,தன்னால் தினமும் கால் மணி நேரம் கூட ஒழுங்காக தூங்க முடியவில்லை மக்களுக்காக நாட்டிற்காக அவ்வளவு வேலை செய்து கொண்டு வருகிறேன், அதுமட்டுமின்றி கட்சியின் பொதுச்செயலாளர் என்ற முறையில் பல கட்சி வேலைகளை பார்க்க வேண்டும் எனவும் பேசினார்.

இலவச மின்சாரம் தொடர்பாக தொடர்ந்து பேசிய துரைமுருகன் தனது சிறுவயது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டு மிக உருக்கமாக மிகவும் டச்சிங்காக பேசினார். நான் ஒன்றும் பெரிய பணக்கார வீட்டுப் பிள்ளை இல்லை காட்பாடி அடுத்த காங் குப்பத்தில், மூன்று, நான்கு ஏக்கர் விவசாய நிலம் வைத்திருந்த ஏழை விவசாயி யின் மகன் தான் நான். அதனால் தினந்தோறும் நான் விவசாய வேலைகளை செய்திருக்கிறேன் என்னுடைய வாழ்க்கையில் ஏர் ஒட்டி இருக்கிறேன், நாற்று நட்டு இருக்கிறேன், கத்திரிக்காய் எல்லாம் அறுத்துக் கொண்டு வந்து வீட்டில் கொட்டி பெரிய காய்களை மேல் வைத்துக்கொண்டு தலையில் சுமந்து பல கிலோமீட்டர் தூரம் சென்று விற்று பணத்தை அம்மாவிடம் கொண்டு வந்து கொடுத்திருக்கிறேன்.
இதையும் படிங்க: கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்! இமெயிலில் வந்த அச்சுறுத்தல்.. கலவரமான ஆசிரியர்கள்..
அப்படிப்பட்ட இந்த துரைமுருகன் தான் ஏழைகளின் கஷ்டங்களை உணர்ந்த இந்த துரைமுருகன் தான் இன்றைக்கு உங்களுக்கெல்லாம் இலவசம் மின்சாரம் கொடுக்க மிகப்பெரிய காரணமாக இருந்திருக்கிறேன் நான் மந்திரியாக இருந்தபோது தலைவர் கலைஞர் ஒரு முறை மக்களுக்கு என்ன செய்யலாம் என்று கேட்டார் அப்படி கேட்டவுடன் இலவசமாக மின்சாரம் அளிக்கலாம் என நான் சொன்னேன் அப்படி உருவான திட்டம் தான் இந்த இலவச மின்சார திட்டம்.

விவசாயிகள் எத்தனை போர்வெல் கிணறுகளை வேண்டுமானாலும் தோண்டிக் கொள்ளலாம் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் மோட்டார் போட்டுக் கொள்ளலாம் ஆனால் ஒரு ரூபாய் கூட கட்டணம் கிடையாது கிணற்றில் தண்ணீர் இருந்தால் மட்டும் போதும் ஒரு விவசாயி 10 முதல் 25 போர் போட்டு தண்ணீர் எடுத்தாலும் எத்தனை ஆயிரம் யூனிட் மின்சாரம் பயன்படுத்தினாலும் ஒரு ரூபாய் கூட கட்டணம் தேவை இல்லை என்று, தலைவரிடம் சொன்னேன் எத்தனை எத்தனை ஆயிரம் யூனிட் மின்சாரம் விவசாயிகள் விவசாயத்திற்காக பயன்படுத்தினாலும் கட்டணம் கிடையாது என்ற கையெழுத்தை நான் போட்டேன் அப்போது பேனாவை எடுத்து கையெழுத்து போடும்போது என் கண்ணில் இருந்து தண்ணீர் கொட்டியது உடன் இருந்த அதிகாரி ஐயா ஏன் அழுகிறீர்கள்? என்று கேட்டதும் நான் எதற்கு அழுகிறேன் என்று பதில் கூறினேன்.
நான் என்னுடைய சிறுவயதில் பார்த்த நினைவுகளை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் எங்கள் அம்மாவிடம் மூன்று பம்பு செட்டுகள் இருந்தது.ஆனால் தண்ணீர் இல்லாமல் எங்கள் நிலம் காய்ந்து போய் இருந்தது ரெண்டு மதத்துக்கு ஒருமுறை கரண்ட் பில் வரும்போது எல்லாம் எங்க அம்மா ஒவ்வொரு நகையாக கொடுத்து அடமானம் வைத்து கரண்ட் பில் கட்டுவார்கள்,

கல்லூரிகள் படித்துக் கொண்டிருந்த காலம் என்பதால் நானும் சம்பாதிக்காமல் இருந்தேன், செல்வந்த குடும்பத்தில் பிறந்த எனது அம்மா இறக்கும்போது அத்தனை நகைகளையும் விற்று மூக்கு மற்றும் காதில் தொடைப்பக்குச்சியுடன் இறந்திருந்தார் என் அம்மா போல எந்த ஒரு தாயும் இனி கண்ணீர் வடிக்க கூடாது என்று தான் இந்த உத்தரவு போட நான் முடிவு எடுத்தேன் இந்த உத்தரவின் பெயரில் தான் இதுவரை விவசாயிகள் அனைவருக்கும் தமிழகம் முழுவதும் இலவச மின்சாரத்தை மகிழ்ச்சியாக பயன்படுத்தி வருகின்றனர்.
கட்சிக்காரர்கள் பொதுமக்கள் என்னை காட்பாடியில் எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்றும் அந்த நிகழ்ச்சியில் துரைமுருகன் தெரிவித்தார்
தமிழகத்தில் இலவச மின்சார அறிவிப்புக்கு பின்னால் இவ்வளவு பெரிய சம்பவங்கள் நடந்திருப்பதை துரைமுருகன் விவரிப்பதை கேட்ட அங்கு குழுமியிருந்த மக்கள் மற்றும் தொண்டர்கள் உருக்கத்தோடு கேட்டு நெகிழ்ச்சி அடைந்தனர்
இதையும் படிங்க: திமுக ஒரு திட்டத்தை எதிர்த்தால் அது சூப்பர்ன்னு அர்த்தம்.. மக்களுக்கு பாடம் எடுத்த ஹெச்.ராஜா!