சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆலோசனை கூட்டத்திலும், அதிமுக சீனியரான முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை. தொடர்ச்சியாக அவர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் முதலே அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்.
கடந்த இரண்டு நாட்களாக தமிழக பட்ஜெட், வேளாண்மை பட்ஜெட் தொடர்பாக நடந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அறைக்கும் செங்கோட்டையன் வரவில்லை. அதேபோல் முதல் நாள் நடைபெற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கூட்டத்திலும் அவர் கலந்து கொள்ளவில்லை. இன்று மூன்றாவது நாளாக சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான ஆலோசனை கூட்டத்திலும் அவர் பங்கேற்கவில்லை.

இரண்டு நாட்களாக சபாநாயகர் அறையில் அமர்ந்திருந்த செங்கோட்டையன் இப்போது பேசு பொருளாகி வருகிறார். இந்நிலையில் அதிமுக தற்போது புதிய யுத்தியை கையில் எடுத்திருக்கிறது. கடந்த இரண்டு நாட்களாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விவகாரம் தான் முக்கிய பற்றி எரிந்து வருகிறது. பட்ஜெட் விவகாரம் என்பதெல்லாம் தாண்டி அதிமுக உக்கட்சி விகாரம் பொதுவெளியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. எனவே அதனை தவிர்ப்பதற்காக அதிமுகவினர் இன்றைய தினம் ஒரு புதிய யுக்தியை கையில் எடுத்து இருக்கின்றனர்.
இதையும் படிங்க: செக் வைத்து ஆப்பை செருகிக் கொண்ட எடப்பாடியார்… அதிர வைக்கும் செங்கோட்டையனின் எதிர்ப்பு பின்னணி..!

அதாவது, செங்கோட்டையன் எப்படி கடந்த இரண்டு நாட்களாக முன்கூட்டியே சபாநாயகர் அறையில் அமர்ந்திருப்பாரோ, அதேபோல் 10க்கும் மேற்பட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நேரடியாக வந்து சபாநாயகர் அமர்ந்திருந்தார்கள். இதன் மூலம் அவர்கள் தெரியப்படுத்துவது என்னவெனில் செங்கோட்டையன் மட்டும் சபாநாயகர் அறைக்கு வருவதில்லை. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பல பேரும் வந்து செல்கிறார்கள். செங்கோட்டையன் மட்டும் சென்று தனியாக சந்தித்தது போல ஒரு தோற்றத்தை பொது வழியில் உருவாக்க வேண்டாம்.
அதனை தவிர்ப்பதற்காகவே மூன்று, நான்கு பேர் மட்டும் தொகுதி பிரச்னை தொடர்பான புகார் மனுவை கொடுத்தார்கள். முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தனது தொகுதி சார்ந்த ஒரு பிரச்சினையை மனுவாக சபாநாயகரிடம் கொடுத்தார். மற்றவர்கள் எல்லாம் சட்டப்பேரவை தொடங்கும் வரை சபாநாயகர் அறையிலேயே இருந்தார்கள். தேவை எஅதுவும் இன்றி மற்ற அதிமுக எல்.எல்.ஏக்கள் சபாநாயகர் அறையில் அமர்ந்து இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
அதே நேரத்தில் செங்கோட்டையன் தாமதமாக வந்து சபாநாயகர் அறையில் அமர்ந்தார். செங்கோட்டையன் பத்து நிமிடங்கள் தாமதமாக 9. 40 மணிக்கு சட்டப்பேரைக்கு வந்தார். அப்போது, சட்டப்பேரவை வளாகத்தில் வழக்கமான அலுவல்கள் தொடங்கிவிட்டது. இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு விட்டது. வினா விடை நேரம் தொடங்கி இரண்டு, கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து விட்டார்கள். அதன்பிறகுதான் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சட்டப்பேரவை வளாகத்திற்கு உள்ளே வந்தார்.

அவர் வந்தபோது அவரது ஆதரவாளர்களான ஒரு சில எம்எல்ஏக்கள் அவருக்கு வணக்கம் வைத்தனர். தற்போது செங்கோட்டையன் தனக்கான இருக்கையில் அமர்ந்து கொண்டிருக்கிறார். வழக்கமான அலுவல் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது தான் பேசுபொருளாவதை தவிர்ப்பதற்காகவே திட்டமிட்டு பத்து நிமிடங்கள் தாமதமாக செங்கோட்டையன் வந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அதிமுகவை அழிக்கும் ஈகோ... செங்கோட்டையன்தான் சீனியர்- உற்சாகத்தில் ஓ.பி.எஸ்