மனிதன் பூமியை ஆண்டது போதாது என விண்வெளியிலும் தனது ஆய்வை தொடங்கி வருகிறார். உலகின் வல்லரசு நாடுகளும், இந்தியா போன்ற வளரும் நாடுகளும் விண்வெளி ஆய்வுக்கு என பில்லியன்களில் பணத்தை செலவழித்து வருகின்றன. செவ்வாய் கிரகத்தில் மனிதன் வசிப்பதற்கு ஏற்ற சூழல் உள்ளதா என்று நாசா ஆய்வுகளை செய்து வருகின்றனர். இதற்காக 2018ம் ஆண்டு கியூரியா சிட்டி என்ற விண்கலத்தை நாசா விண்ணில் ஏவியது. இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்திற்கு சென்று தனது ஆய்வுகளை தொடங்கியது.

அதில் செவ்வாய் கிரகத்தில் சுமார் 30 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட பண்டைய கரிமப்பொருள் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது. மேலும், அடுத்த 20 ஆண்டுகளில் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் குடியேறுவதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாகவும் ஆய்வில் தெரிய வந்ததுள்ளது. நாசா மட்டுமில்லாமல் ஐரோப்பிய விண்வெளி நிறுவனமும் செவ்வாய் கிரகத்தில் ஆய்வுகளை செய்து வருகிறது.
இதையும் படிங்க: இனி நிலாவுல ஃபோன் பேசலாம்... கனெக்ஷன் கொடுத்த நோக்கியா!!
அது பூமத்திய ரேகைக்கு அடியில் தூசி நிறைந்த பனிக்கடிகள் இருப்பதை உறுதி செய்துள்ளன. இந்த வரிசையில் சீனாவும் சளைத்தவர்கள் இல்லை என விண்வெளி மைய ஆய்வில் ஈடுபட்டு வருகிறது. சீனா அனுப்பிய ஜூராங்க் ரோவர் என்ற செயற்கைகோள் செவ்வாய் கிரகத்தில் சுமார் 300 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பழமையான கடற்கரை படிமங்களை கண்டறிந்துள்ளது.

செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கு தேவையான நீர், ஆக்ஸிஜன், மண் வளம் உள்ளதா என்ற ஆய்வில், அங்கு கடற்கரை இருந்ததற்கான சாத்திய கூறுகள் கிடைத்துள்ளன. அங்கு இந்த அந்த கடல் நம் பூமியில் உள்ளதை போல் உவர்ப்பு தன்மை கொண்டதா? அல்லது தண்ணீரின் சுவை மாறுபடுமா என்ற ஆய்வுகளை தொடர்ந்துள்ளன. எது எப்படியோ செவ்வாய் கிரகத்தில் கடற்கரை இருப்பது உறுதியானதால் சீக்கிரமே அங்கே குடியேற நினைக்கும் விஞ்ஞானிகளின் முயற்சி விரைவில் சாத்தியமாகலாம் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பூமியை நோக்கி வேகமாக வரும் 'சிட்டி டெஸ்ட்ராயர்' விண்கல்... வழியிலேயே தாக்கி அழிக்க "நாசா" திட்டம்..!