தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில் இன்று ஆங்காங்கே மழை பெய்தது. தென் மாவட்டங்களில் இன்று அதிகாலை முதலே மழை பெய்ய தொடங்கியது. தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் இன்று காலையில் இருந்தே கனமழை கொட்டி தீர்த்தது. தென்காசி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது.

நாமக்கல், கரூரில் மதியத்திற்கு மேல் மிதமான மழை பெய்தது. இந்த நிலையில் தமிழகத்தின் மூன்று மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதையும் படிங்க: மழைக்கு மரத்தின் கீழ் ஒதுங்கிய மக்கள்.. மின்னல் தாக்கி பலியான சோகம்.. கள்ளக்குறிச்சியில் சோகம்..!
நாளை தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னதுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை மறுநாள் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 14 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 17 ஆம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தென் மாவட்ட மக்களே உஷார்! ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை மையம்!