''கலைஞர் கோட்டாவில் படித்து விட்டு மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து வாங்கும் தமிழிசையை எதைக் கொண்டு அடிப்பது''? என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடுமையாகத் தாக்கி பேசியதற்கு பாஜகவின் தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து பேசிய ஆர்.எஸ்.பாரதி, ''இப்போ இருக்கிறதே.. ரொம்ப குத்துதே... பேசுதே... கோமியம் குடித்தால் கேன்சர் போகும் என்று டாக்டர் படித்துவிட்டு, மாட்டு மூத்திரம் குடித்தால் கேன்சர் போய்விடும் என்று சொல்லும் அதிமேதாவி தமிழிசை. நீ எம்.பி.பி.எஸ்-க்கு எப்படி வந்தாய். தகுதியின் அடிப்படையில் வந்தாயா ? மார்க் வாங்கி, சீட்டு வாங்கினாயா ? என் தலைவன் கலைஞர், உன் தந்தை குமரி ஆனந்தன் தமிழ் பேசினார், தமிழ் புலவன், என்கிற காரணத்தினால் அந்தக் கோட்டாவில் மெடிக்கல் காலேஜ் கொடுத்தார்.
இதையும் படிங்க: விஜய் செய்ததை உதயநிதியால் செய்யத் துணிவிருக்கா..? இயக்குநர் பேரரசு

எங்கள் கோட்டாவில், கலைஞர் கொடுத்த கோட்டாவில், தமிழ் அறிஞர் என்று சொல்லி தமிழ் கோட்டாவில் டாக்டர் படித்துவிட்டு மும்மொழி கொள்கைக்கு கையெழுத்து வாங்குகிறாய் என்றால் உன்னை எதால் அடிப்பது..? என கடுமையாக விமர்சித்தார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள தமிழிசை, ''நான் கேட்கிறேன் எங்க அப்பாவின் கோட்டாவில் வந்ததாக சொல்கிறீர்கள். உதயநிதி இன்றைக்கு எந்த கோட்டாவில் துணை முதலமைச்சராக இருக்கிறார்? நீங்கள் துணை முதலமைச்சர் ஆக வேண்டும் என்று உங்களுக்கு ஆசை கிடையாதா? எந்த அடிப்படையில் உதயநிதி துணை முதலமைச்சர் ஆனார்? நான் கஷ்டப்பட்டு படித்து, ஒவ்வொரு தேர்விலும் பெயிலாகாமல் அதற்கு மேல் மேற்படிப்பு படித்து, அயல்நாட்டில் போய் மேல்படிப்பு படித்து விட்டு வந்திருக்கிறேன்.

ஆனால், நீங்கள் எங்களை பார்த்து கோட்டாவில் படித்ததாக சொல்கிறீர்கள். அப்போ ரிசர்வேஷனில் வருகிற பிற்படுத்தப்பட்ட -பட்டியலின மக்களை அப்படி சொல்கிறீர்களா? என்ன பேசுகிறீர்கள்? திமுக இல்லை என்றால் தமிழ்நாட்டில் யாருமே படித்திருக்க மாட்டார்கள் என்பது போல் சொல்கிறீர்கள்? அவரவர் அறிவை நீங்கள் குறைத்து மதிப்பிடுகிறீர்களா? உங்கள் கட்சியில் உள்ள எல்லோரும் படித்து விட்டீர்களா? நான் கேள்வி கேட்டால் எப்படி வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம். ஆனால், மரியாதை இல்லாமல் அரசியல் செய்ய மாட்டோம்'' எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: முதல்ல மிஸ்டுகால் குடுத்து ஆள் சேர்த்தாங்க இப்ப பிஸ்கட்... நக்கலடித்த உதயநிதி!