மதுரையில் துரை வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தென் மாவட்டங்கள் போன்ற சில பகுதிகளில் பன்றி தொல்லை உள்ளது. இது போன்ற பல்வேறு இடர்பாடுகளால் விவசாயம் செய்ய முடியாத சூழல் உள்ளது. இந்தச் சூழலில் மக்காச்சோளத்துக்கு கடந்த ஆண்டு விதித்த செஸ் வரியை நீக்க வேண்டும் என முதல்வர், துணை முதல்வர் மற்றும் நிதியமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தினேன்.இதைத் தொடர்ந்து மக்காச் சோளத்திற்கான ஒரு சதவீத வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்காக முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தேன்.
விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர், கோவில்பட்டி, சிவகாசி போன்ற இடங்களில் தீப்பெட்டி தொழிற்சாலை தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் பிளாஸ்டிக் லைட்டர் இருக்கிறது. இதுபோன்ற உதிரி பாகங்களின் இறக்குமதியைத் தடுக்க வேண்டும். உள்ளூர் பகுதியில் அதற்கான உதிரி பாகங்களை தயாரிக்க வழிவகை செய்யவேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.

பிரசாந்த் கிஷோர் என்பவர் அடிப்படையில் அரசியல் ஆய்வாளர். அவர் சொல்வதெல்லாம் 100-க்கு 100 நடப்பது கிடையாது. பீகாரில் அவருடைய கட்சியே தோல்வி அடைந்து விட்டது. அவர் எப்போதும் ஜெயிக்கும் குதிரையில்தான் பயணிப்பார். தமிழகத்தில் விஜய் பற்றி அவர் கூறுவது எதுவும் நடக்காது. விஜய் பெரிய நட்சத்திரம்தான். அவர் பின்னால் நிறைய இளைஞர்கள் இருக்கின்றனர். அவருடைய சிந்தாந்தத்தை வரவேற்கிறோம். முதலில் அவர் மக்களிடம் செல்ல வேண்டும். பத்திரிகையாளர்களை நேரடியாகச் சந்திக்க வேண்டும்.
விஜய்யின் செயல்பாடுகளைப் பொறுத்தே அவருடைய அரசியல் எதிர்காலம் அமையும். திமுக அரசை எதிர்க்கும் விதமாக அவர் கருத்துகளைச் சொல்லி வருகிறார். அரசு எப்படி செயல்பட்டது என்பதை 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் தீர்மானிப்பர். ஆளுநராக இருந்த தமிழிசை கல்வி வளாகத்தில் மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் பிரச்சாரம் செய்வதும் கையெழுத்து வாங்குவதும் தவறு. கல்வி வளாகத்தில் அரசியல் பேசுவதும் தவறு. அவர் ஆளுநராக இருந்தவர். கட்சியிலும் முக்கிய பதவியில் இந்திருக்கிறார். அது கூட அவருக்கு தெரியவில்லை. நான் தீவிரவாதியா எனக் கேட்கிறார்.
இதையும் படிங்க: வாய்ஸ் கொடுத்தே கெடுத்தவர் இந்த ரஜினி.. 1996ஐ கிண்டி கிளறும் அரசியல் விமர்சகர்..!

தீவிரவாதிகளைவிட மதங்களை வைத்து அரசியல் செய்பவர்கள் மோசமானவர்கள். ஆங்கிலம் கூடாது என வட மாநிலங்களில் பேசுகின்றனர். ஆங்கிலம் இன்றி வளர்ச்சியை எதிர்பார்க்க முடியுமா? ஆங்கிலம் இல்லாத இந்தியாவை உருவாக்க அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவகள் வட மாநிலங்களில் பிரச்சாரம் செய்கிறார்கள். 100 நாள் போன்ற வேலை திட்டத்திற்கு வட மாநிலங்களில் கடந்த 3 மாதங்களாக மத்திய அரசு நிதி வழங்கவில்லை. திராவிட இயக்கங்கள் தமிழுக்கு உண்டான அங்கீகாரத்தை வழங்கியுள்ளனர். தமிழ்நாடு மட்டுமின்றி வெளிநாடு பல்கலைக்கழகங்களுக்கும் தமிழை வளர்க்க முயற்சிகின்றனர். அதுபோன்று திராவிட இயக்கங்கள் தமிழ் வளர்ச்சிக்கென எடுத்த முயற்சிகளை யாரும் மறுக்க முடியாது" என்று துரை வைகோ தெரிவித்தார்.
இதையும் படிங்க: அனுமதியில்லாமல் சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்குவீங்களா..? முறியடிப்போம் என வைகோ ஆவேசம்.!