ஹாலிவுட் வரலாற்றில் அனிமேஷனில் ஆக்ஷன் படம் என்று வந்ததோ, அன்றிலிருந்து உலகம் முழுவதும் ரசிகர்களும் பெருகி கொண்டே உள்ளனர். குறிப்பாக அவென்ஜ்ர்ஸ், ஸ்பைடர் மேன், சூப்பர் மேன், அவதார் என பல படங்களும் கொரியன் சீரிஸ்களும் இன்று அனைவராலும் பார்க்க படுகிறது. பெருமளவில் அனைவரும் எதிர்பார்த்த சீரிஸ் என்றால் ஸ்குவிட் கேம் தான்.. ஆனால் இவை அனைத்தையும் பின்னுக்கு தள்ளி அனிமேஷன் கதைக்களத்தில் கிங் ஆக நிற்கிறது நேஜா 2.

அசாதாரண தற்காப்புக் கலைத் திறன்களும், மாயாஜால சக்திகளையும் கொண்ட ஒரு புராண சிறுவனின் கதையைச் விவரிக்கும் சிறந்த படைப்புதான் நே ஜா 2. இதன் முதல் பாகமான நேஜா 2019ல் வெளியானது. அப்பொழுதே இப்படத்துடன் வெளியான "தி பேட்டில் அட் லேக் சாங்ஜின்" என்ற படத்தின் வசூல் சாதனையை முறியடித்து சாதனை படைத்தது .
இதையும் படிங்க: சுந்தரிக்கு தடபுடலாக நடந்த வளைகாப்பு..! வைரலாகும் புகைப்படங்கள்..!

2019ஆம் ஆண்டு வெளியான "நே ஜா" திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் 16ஆம் நூற்றாண்டின் "இன்வெஸ்டிச்சர் ஆஃப் தி காட்ஸ்" என்ற சீன நாவலின் பாரம்பரிய நாட்டுப்புறக் கதைகளை மையமாக கொண்டு அனிமேஷன் செய்யப்பட்ட படமாகும். “நே ஜா 2” சீன வரலாற்றில் அதிக வசூல் செய்த ஒன்று. இதுவரை சுமார் 13 ஆயிரம் கோடிகளை கடந்து வசூல் வேட்டையில் உலக சாதனை படைத்துள்ளது.
இதையும் படிங்க: 'தில்லுபாரு ஆஜா' பாடுறது STR ராஜா...! இன்னைக்கு கண்டிப்பா ட்ரீட் இருக்கு ...!